எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.13 - சட்டமன்ற தேர்தலில் உடலில் வர்ணம் பூசி பிரச்சாரம் செய்த விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, இல்லத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை பொருளாளர் வழக்கறிஞர் எஸ். ஜெயபிரகாஷ் தலைமையில், திண்டிவனத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறை நிர்வாகிகளான கே. சுரேஷ், ஜி.கோகுல், ஏ.ஹரிகிருஷ்ணன், ஏ.வெற்றிச்செல்வன், டி.சுபாஷ், டி.நரேந்திரன், மதன், ஆனந்த், கே.பிரகாஷ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், திமுகவினரின் பல்வேறு ஊழல்களையும், அராஜகங்களையும், நிர்வாகத் திறமை இன்மையையும், விலைவாசி உயர்வையும் மக்களுக்கு தெளிவாக விளக்கிடும் வகையில், தங்கள் உடலில் கழக வர்ணங்களை nullசிக் கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து கழகத்தின் வெற்றிக்குப் பாடுபட்டதாக தெரிவித்தனர்.
இதனைக் கேட்டறிந்த கழகப் பொதுச் செயலாளர், தமிழக முதல்வர் ஜெயலலிதா, நூதன முறையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை பொருளாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தமது பாராட்டுதலை தெரிவித்துக் கொண்டதோடு, விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புத் தேர்தலிலும் இதே போன்று கடுமையாக தேர்தல் பிரச்சாரம் செய்து, கட்சியின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று தெரிவித்து, அனைவருக்கும் தமது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |