முக்கிய செய்திகள்

தமிழகத்தில் 11 உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.21 - தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். நெல்லை, வேலூர் சரகங்களுக்கு புதிய டி.ஐ.ஜி.க்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:​

1. கோவை மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்துப்பிரிவு துணை கமிஷனர் என்.நிஜாமுதீன் மாற்றப்பட்டு, நீnullலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

2. நீnullலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.காளிராஜ் மகேஷ்குமார் மாற்றப்பட்டு, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக  நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

3. சேலம் மாநகர சட்டம்​ஒழுங்கு துணை கமிஷனர் எஸ்.பாஸ்கரன் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை புறநகர் பரங்கிமலை துணை கமிஷனராகிறார்.

4. பரங்கிமலை துணை கமிஷனர் ஜி.ராமர் மாற்றப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

5. நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை புறநகர் மாதவரம் துணை கமிஷனராக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்.

6. மாதவரம் துணை கமிஷனர் ஏ.கயல்விழி, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய சூப்பிரண்டாக மாற்றப்பட்டு உள்ளார்.

7.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய சூப்பிரண்டு எஸ்.ராஜேந்திரன் ,சென்னை புறநகர் அம்பத்தூர் துணை கமிஷனராக பொறுப்பேற்பார் என கூறப்பட்டுள்ளது.

8. சென்னை புறநகர் அம்பத்தூர் துணை கமிஷனராக இருந்த  ஜாண் செல்லையா டி.ஜி.பி. அலுவலகத்தில் உதவி ஐ.ஜி.யாக (சட்டம் ஒழுங்கு) நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த பதவியில் உள்ள எம்.சத்யபிரியா  இடம் மாற்றப்பட்டு உள்ளார்.

9. புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு கடலோர காவல்படை சூப்பிரண்டு சித்தண்ணன், சென்னை போலீஸ் அகடெமி சூப்பிரண்டாக மாற்றப்பட்டு இருக்கிறார். போலீஸ் அகடெமி சூப்பிரண்டு துரைராஜ் வேறு பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

10. நெல்லை சரக டி.ஐ.ஜி. எம்.ராமசுப்பிரமணி, திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார்.  நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜு நெல்லை சரக டி.ஐ.ஜி. பொறுப்பையும் கூடுதலாக சேர்த்து கவனிப்பார்.

11. வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக எஸ்.என்.சேஷசாய் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: