முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர்: காரத்

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

சண்டிகர்,ஜூலை.23 - லோக்பால் வரம்புக்குள் பிரதமரையும் கொண்டு வர வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வலியுறுத்தி உள்ளார். சண்டிகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, வரும் 1 ம் தேதி தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் லோக்பால் மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டும். இந்த மசோதா வலுவானதாக இருக்க வேண்டும். பிரதமரையும் இதன் அதிகார வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். அன்னா ஹசாரே குழுவினர் பரிந்துரை செய்திருக்கும் லோக்பால் வரைவு மசோதாவிலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றையும் சரி செய்தாக வேண்டும். 

ஊழல் தடுப்பு சட்ட வரம்புக்குள் பிரதமரும் வருகிறார். அப்படியிருக்க லோக்பால் விசாரணை வரம்புக்குள் அவரை கொண்டு வருவதுதான் முறை. அதே நேரத்தில் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் நீதிமன்ற நீதிபதிகளுக்கு லோக்பால் விசாரணையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். நீதித்துறையிலும் ஊழல் இருக்கத் தான் செய்கிறது. அதை கண்காணிப்பதற்கு தேசிய நீதி ஆணையத்தை உருவாக்கலாம். 

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைகட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தவறி விட்டதால்தான் பண வீக்கம் இரட்டை இலக்கத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. பெட்ரோலிய பொருட்களுக்கு வரி விதிக்கும் முறையில் அரசு மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம். மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீரழிந்து விட்டது. இந்த இரு மாத காலத்தில் இடதுசாரி தொண்டர்கள் 27 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஊராட்சி பிரதிநிதிகள் தங்கள் அலுவலகங்களுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்