முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சதானந்த கவுடா வெற்றி எனக்கு கிடைத்த வெற்றி: எடியூரப்பா

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,ஆக.5 - முதல்வர் சதானந்த கவுடாவுக்கு கிடைத்துள்ள வெற்றி எனக்கு கிடைத்த வெற்றியாகும் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார். லோக் ஆயுக்தா குற்றச்சாட்டையொட்டி முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்துவிட்டார். அவருக்கு பதிலாக சதானந்த கவுடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல்வரை தேர்வு செய்வதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் போட்டி ஏற்பட்டது. பாரதிய ஜனதாவில் இருந்து முதல்வர் பதவிக்கு 2 பேர் போட்டியிட்டனர். பா.ஜ. கட்சியை சேர்ந்த சதானந்த கவுடாவும் தற்போது அமைச்சராக இருக்கும் ஷெகதீஷ் ஷெட்டரும் போட்டி போட்டனர். முதல்வரை தேர்ந்தெடுக்க பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் ரகசிய ஓட்டுப்போட்டனர். இதில் சதானந்த கவுடாவுக்கு 64 ஓட்டுக்களும் ஷெட்டருக்கு 54 ஓட்டுக்களும் கிடைத்தன. அதிக ஓட்டுக்களை பெற்ற சதானந்த கவுடா வெற்றிபெற்றதாக அறிக்கப்பட்டது. சதானந்தாவுக்கு எடியூரப்பா ஆதரவாளர்கள் ஆதரவு கொடுத்தனர். அதேமாதிரி ஷெகதீஷ் ஷெட்டருக்கு பா.ஜ. மூத்த தலைவர் அனந்த குமார் ஆதரித்தார். இறுதியில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் எடியூரப்பா ஆதரித்த  சதானந்த கவுடா வெற்றி பெற்றார். அதனால் சதானந்த கவுடா ரெட்டி எனது வெற்றி என்று எடியூரப்பா கூறியுள்ளார். பா.ஜ.வில் நான் ஒரு சாதாரண தொண்டன் மாதிரிதான். சதானந்த கவுடா வெற்றி, எனது வெற்றி, கட்சி வெற்றி, ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என்றார். சதானந்தா சுதந்திரமாக செயல்படும் அளவுக்கு திறமையும் தைரியமும் மிக்கவர். எந்த விஷயத்திலும் நான் தலையிட மாட்டேன் என்று எடியூரப்பா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்