முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் 8 பேரை சுட்ட இளைஞன் சுட்டுக் கொலை

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

ஓகையோ,ஆக.10 - அமெரிக்காவில் ஓகையோ மாகாணத்தில் இளைஞர் ஒருவர் வெறித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் உயிரிழந்தனர். அந்த இளைஞனின் பெண் நண்பரும் மற்றும் அவரது சகோதரரும் இதில் அடங்குவர். இதில் 3 குழந்தைகளும் அடங்கும். துப்பாக்கியால் சுட்ட அந்த இளைஞனை போலீசார் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவில் ஹூக்ளே என்ற பகுதியில் தெருவில் துப்பாக்கியுடன் ஓடிய இளைஞர் ஒருவர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டார். தனது பெண் நண்பரின் வீட்டுக்குள் சென்ற அவன் அங்கும் துப்பாக்கி சூடு நடத்தினார். வெளியே வந்த அவன் தெருவில் சென்றவர்களையும் சுட்டான். இதனால் போலீசார் அவனை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் போலீசாருடனும் மோதலில் ஈடுபட்டான். இந்த மோதலில் அந்த இளைஞன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!