முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திபெத் பிரதமராக லோப்சாங் சாங்கே பதவியேற்பு

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

தர்மசாலா,ஆக.10 - திபெத் பிரதமராக லோப்சாங் சாங்கே பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி கபாங்பெல்கியால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு தலாய்லாமா தலைமை வகித்தார். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கலந்து கொண்டனர். அப்போது தலாய்லாமா பேசுகையில், ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ள லோப்சாங் சாங்கேயிடம் இப்போது அனைத்து அரசியல் பொறுப்புகளையும், அதிகாரங்களையும் அளிக்கிறோம் என்றார். 43 வயதாகும் லோப்சாங் சாங்கே ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்