முக்கிய செய்திகள்

அமெரிக்க கல்வித் தரத்தை மேம்படுத்துவது அவசியம்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஆக.11 - அமெரிக்காவின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும். இந்தியா, சீனா மற்றும் பிரேசிலை சேர்ந்த மாணவர்களுடன் போட்டியிடும் வகையில் அமெரிக்க மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது அவசியம் என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார். அமெரிக்க கல்வி முறை போட்டிகளை சமாளிக்கும் வகையில் மாணவர்களை உருவாக்கவில்லை. எனவே உரிய மாற்றங்களை செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஜனநாயக கட்சி ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ஒபாமா மேலும் கூறியதாவது, கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவில்லை எனில் அமெரிக்க குழந்தைகள் இந்தியா, சீனா, பிரேசில் மாணவர்களுடன் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்படுவர். இந்த மூன்று நாடுகளை சேர்ந்த இளம் தலைமுறையினர் மிக சிறந்த வலுவான வேலைவாய்ப்பு சக்தியாக உருவெடுத்துள்ளனர். எந்த ஒரு நாட்டிலும் வேலை செய்ய தயங்குவதில்லை. இதனாலேயே இந்த நாடுகள் பொருளாதாரத்தில் மிக சிறந்த வளர்ச்சியை எட்டியுள்ளன. 

இதை கருத்தில் கொண்டு எடுத்த நடவடிக்கைகயின் விளைவாக கடந்த 17 மாதங்களில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெருகியுள்ளது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதார நிகழ்வுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. பிற நாடுகளின் பிரச்சினை ஏற்பட்டால் அது அமெரிக்காவையும் பாதிக்கும். கல்வி துறை சீர்திருத்தத்தின் அங்கமாக அதிகளவு நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக போட்டிகளை சமாளிக்கும் திறமை மிக்க மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: