முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி: திடீர் போர்நிறுத்தத்தை அறிவித்த தாய்லாந்து-கம்போடியா அரசுகள்

சனிக்கிழமை, 27 டிசம்பர் 2025      உலகம்
Thailand-Compodia-2025-12-2

பாங்காக், எல்லையில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து-கம்போடியா அரசுகள் அறிவித்துள்ளன. 

தாய்லாந்து - கம்போடியா இடையே நுாறாண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த எல்லை பிரச்சினை, ஜூலையில் மோதலாக வெடித்தது. ஐந்து நாட்கள் நீடித்த மோதலில் இரு தரப்பிலும் 43 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் மலேசிய அதிபர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால், அக்டோபரில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 7-ம் தேதி நடந்த மோதலில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால், மீண்டும் இரு நாடுகளுக்கிடையே சண்டை வெடித்தது. 20 நாட்களாக மோதல் நீடித்து வந்த நிலையில், இதுவரை 101 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தாய்லாந்து-கம்போடியா இடையிலான மோதல் காரணமாக இருநாடுகளைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில், எல்லையில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து-கம்போடியா அரசுகள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக இருநாட்டு அரசுகளும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த போர்நிறுத்தம், அனைத்து சூழ்நிலைகளிலும், அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள், பொதுமக்களின் உடைமைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள், இரு தரப்பினரின் ராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய போர்நிறுத்தமாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து