முக்கிய செய்திகள்

ஹசாரேவுக்கு ஆதரவாக மெல்போர்னில் பேரணி

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

மெல்போர்ன்,ஆக.23 - ஆஸ்திரேலிய நகரங்களிலும் அன்னா ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவாக ஊர்வலம் நடைபெற்றது. மெல்போர்ன் நகரில் நடைபெற்ற அன்னா ஹசாரே ஆதரவு ஒன்று கூடல் நிகழ்ச்சியில் 70 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஊழலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தாய்நாட்டில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் போதும், ஊழல் இல்லாத இந்தியாவை காண விரும்புவதாக ஊர்வலத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் தெரிவித்தார். இதே போல் சிட்னியிலும் ஹசாரே ஆதரவு ஊர்வலம் நடைபெற்றது. அங்குள்ள பாராமாட்டா பகுதியில் 30 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் இந்திய ஆஸ்திரேலிய கவுன்சிலின் தலைவர் யுதுசிங் கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: