முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரேவுக்கு ஆதரவு: திரை உலகினர் உண்ணாவிரதம்

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக 23 - ஊழலை எதிர்த்து லோக்பால் மசோதாவில் பிரதமரையும் சேர்க்க வலியுறுத்தி,  சமூக சேவகர் அன்னா ஹசாரே டெல்லியில் நடத்திவரும் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆதரித்து சென்னையில் இன்று 23 ம்தேதி ஒருநாள் தமிழக திரைஉலகத்தினர் உண்ணாவிரதம் நடத்துகிறார்கள். இது குறித்த விபரம் வருமாறு: காந்தியவாதி அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக நடத்தும் போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. திரை யுலகினரும் அவர் பக்கம் சேர்ந்துள்ளனர்.   இந்தி நடிகர், நடிகைகள் பலரும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக பேட்டி அளித்துள்ளனர். தமிழ் நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன் போன்றோரும் ஊழலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தெலுங்கு திரையுலகம் சார்பில் அன்னா ஹசாரேக்கு ஆதரவாக நேற்று முன்தினம் ஊர்வலம் மற்றும் உண்ணாவிரதம் நடைபெற்றது. தெலுங்கு நடிகர், நடிகைகள் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   இது போல் தமிழ் திரையுலகினரும் அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கின்றனர். சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் இன்று 23 ம்தேதி ஒரு நாள் உண்ணா விரதத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதம் நடைபெறும். நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட விநி யோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவரும் உண்ணா விரதத்தில் பங்கேற்கின்றனர். இந்த உண்ணாவிரத போராட்ட அறிவிப்பை இயக்குனர்கள் சேரன், ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்தி னம், கே.ஆர். ஞானவேல், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ், கே.எஸ். சீனி வாசன், முருகன், சிவராம், ஹேமந்த் பாபு ஆகியோர் பிலிம் சேம்பர் தியேட்டரில் நேற்று சென்னையில் காளை நிருபர்களிடம் தெரிவித்தனர். சினிமா உலகை சார்ந்தவர்கள் அனைவரும் உண்ணா விரதத்தில் பங்கேற் வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.   போராட்ட அமைப்பாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் சித்ராலட்சுமணன் கூறும் போது அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகினர் இன்று நடத்தும் உண்ணாவிரதம் உணர்வு nullர்வமானது. இதில் திரையுலகினரின் அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள். தயாரிப்பாளர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் , இயக்குனர்கள், திரைப்பட தொழிலாளர் சங்கத்தினர் விநியோ கஸ்தர்கள் பெரும் திரளான பங்கேற்கின்றனர் என்றார். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் கூறும்போது:​ ஊழலுக்கு எதிராக அமைதி வழியில் போராடும் அன்னா ஹசாரே நிகழ்கால காந்தியாக காட்சி அளிக்கிறார். மக்கள் சக்தி துணை யோடு ஊழல் அரக்கனை வீழ்த்த களம் இறங்கியுள்ள அவர் வெல்வார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்