முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரிகளுக்கு செல்லாத இந்திய மாணவர்களின் விசா ரத்து

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

சிட்னி, ஆக.26 - ஆஸ்திரேலியாவில் கல்லூரிகளுக்கு செல்லாத இந்திய மாணவர்கள் 72 பேரின் விசாக்களை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 4 லட்சத்து 70 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இதில் அதிகம் பேர் இந்திய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கல்லூரிகளுக்கு செல்லாமல் டிமிக்கி அடிக்கும் மாணவர்களை ஆஸ்திரேலிய அரசு கண்டுபிடித்து அவர்களது விசாக்களை ரத்து செய்து வருகிறது. இதற்காக நாடு முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 9 ஆயிரம் மாணவர்கள் கல்லூரிகளுக்கு சரிவர செல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 159 மாணவர்கள் அதிக அளவில் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டன. இதில் 72 பேர் இந்திய மாணவர்கள். இவர்கள் அனைவரும் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்