முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தகுதிகள் ?

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.21 - உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள, வேட்பாளர்களின் தகுதிகள் மற்றும் தகுதியின்மை குறித்து, மாநில தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் வேகமாக முடுக்கி விட்டுள்ளது. மாவட்ட அளவில் ஓட்டுச்சாவடிகளை தயார் செய்தல், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துதல், ஓட்டுச்சாவடி அலுவலர்களை தேர்வு செய்தல், ஓட்டு எண்ணிக்கைக்கான இடங்களை அறிதல் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேவையான தகுதிகள் மற்றும் தகுதியின்மை குறித்து, மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுளஅளது.

போட்டியிட தேவையான தகுதிகள்:

வேட்பாளர் பெயர், தொடர்புடைய உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் உடம் பெற்றிருக்க வேண்டும்.

வேட்பாளருக்கு, 21 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும்.

தகுதியின்மைகள்:

குற்றவாளி என தீர்மானிக்கப்பட்ட நாளில் இருந்து, ஆறு ஆண்டு காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்.

ஆரோக்கிய குறைவான மனநிலை, செவிட்டூமை நிலை கொண்டவர்கள் போட்டியிட முடியாது.

திவால் ஆனவர் என கருதப்பட்டு, தீர்மானிக்கப்பட்டவர்கள் போட்டியிட முடியாது.

ஊராட்சி தரப்பில் அதனுடன் செய்யப்பட்டு, தற்போது இருந்து வருகிற ஒப்பந்தம் எதிலும் அல்லது அதற்காக செய்யப்பட்டு வருகின்ற பணி எதிலும் உரிமை நலன் கொண்டவராக இருப்பவர்.

ஊராட்சி அமைப்புக்கு எந்த வகையிலாலது கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை செலுத்த தவறியவர்.

ஊராட்சி சார்பிலான ஊதியம் பெறும் சட்ட தொழில் செய்பவர் அல்லது ஒரு ஊராட்சிக்கு எதிரான சட்ட தொழில் செய்ய பணியமாத்தப்பட்டவர்கள்.

உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு பரிசீலனையின் போது, தகுதிகள் மற்றும் தகுதியின்மை குறித்து அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும், என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்