முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப். 22​ - தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.  வேட்பு மனுவில் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் விபரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.  இகு குறித்த விபரம் வருமாறு: தமிழக உள்ளாட்சி  தேர்தலில் வேட்பு மனுக்களின் தாக்கல் நேற்று முதல் சூடுபிடித்துவிட்டது.  இந்நிலையில் வேட்பு மனுக்களில் குறிப்பிட வேண்டிய விவரங்கள் மற்றும் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ் விவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.   சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அதில் கல்வித் தகுதி, சொத்து விவரம் மற்றும் குற்றவியல் (வழக்கு) விவரங்களை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் குறிப்பிட வேண்டும். இந்த தகவலை வேட்பு மனுவுடன் ரூ.20​க்கான முத்திரைத்தாளில் ஆணை உறுதி ஆவணம் (அபிடவிட்) வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட வேண்டும். பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் சாற்றுரை (டிக்லரேசன்) அளித்தால் போதுமானது.   பதிவு செய்யப்படாத அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றைப் nullர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாளன்று பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக சேர்க்க வேண்டும். காலம் கடந்து படிவங்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் சுயேட்சை வேட்பாளராக கருதப்படுவார். இவ்வாறு தேர்தல் கமிஷன்  வெளியிட்ட  செய்தியில் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்