முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

நியூயார்க்,செப்.24 - உறவு முறிவுக்கு காரணமாக இருக்க வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் இருநாடுகளிடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. என்ற உளவு ஸ்தாபனம் செயல்பட்டு வருகிறது. இந்த உளவு ஸ்தாபனமானது அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் நிதியை பெற்று தீவிரவாதிகளை தூண்டிவிட்டு இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் முன்னாள் அதிபரை தலிபான் தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். கடந்த 23-ம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க தூதரகம் மற்றும் நோட்டோ நாடுகளின் அலுவலகம் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  தலிபான் தீவிரவாதிகளுக்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்புக்கும் இடையே தொடர்பு இருக்கிறது. அதேமாதிரி ஹக்கானி மற்றும் தலிபான் தீவிரவாத இயக்கத்துடன் பாகிஸ்தான் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ.க்கும் தொடர்பு இருக்கலாம். இந்த தொடர்பை துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு உயரதிகாரி மைக் முல்லன் எச்சரித்தார். இதனால் பாகிஸ்தான் கோபம் அடைந்துள்ளது. 

இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக பாகிஸ்தான் இளம் வயது  பெண் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹினா ரப்பானி ஹர் நியூயார்க் சென்றுள்ளார். நியூயார்க்கில் ஜியோ நீயூஸ் என்ற அமைப்புக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அமெரிக்காவை கடுமையாக எச்சரித்தார். எங்கள் நாட்டு ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பானது ஒரு உயர்ந்த அமைப்பாகும். இந்த அமைப்புக்கும் தலிபான் ஹக்கானி அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறது என்று அமெரிக்கா கூறியிருப்பது சரியல்ல என்றார். இந்த மாதிரி அமெரிக்கா கூறி வந்தால் அமெரிக்காவுடன் கூட்டணி முறியும். இதற்கு அமெரிக்கா இடம் தரக்கூடாது. பாகிஸ்தானும், பாகிஸ்தான் மக்களும் அமெரிக்க கூட்டணியில் இருந்து பிரிய அமெரிக்கா ஒருபோதும் காரணமாக இருக்கக்கூடாது. பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் தாக்கினர். அப்போது ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டியிருக்கும் அமெரிக்கா இந்த விஷயத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்காக நாங்கள் அமெரிக்காவை குறை கூறவில்லை. அமெரிக்கா ஒரு பெரும் வல்லரசு. பாகிஸ்தான் ஒரு வல்லரசாக இல்லாவிட்டாலும் இருநாடுகளின் இறையாண்மை ஒன்றே என்று ரப்பானி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்