முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாத அமைப்புகளுடன் ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு அமெரிக்கா கருத்துக்கு இந்தியா பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

நியூயார்க்,செப்.- 27 - ஹக்கானி போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ள கருத்துக்கு இந்தியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. 

ஐ.நா. சபையின் பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,  பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது என்ற கருத்தை இந்தியா நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறது. அமெரிக்கா இப்போது தெரிவித்துள்ள கருத்தின் மூலம் இந்தியாவின் கூற்று ஆதாரபூர்வமாக நிரூபணமாகி விட்டது. கடந்த 13 ம் தேதி காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஹக்கானி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அமெரிக்கா ஐ.எஸ்.ஐ. மீது குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.  ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெறுவது குறித்து கருத்து தெரிவத்த அவர், பாதுகாப்பு சபையை விரிவாக்கம் செல்வதென்பது உடனே ஈடேறி விடக் கூடிய விவகாரம் இல்லை என்றார். அதே சமயத்தில் பாதுகாப்பு கவுன்சிலில் தனக்கான இடத்தை இந்தியா உரிய நேரத்தில் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா அமெரிக்கா இடையிலான உறவுகள் குறித்து அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுடன் விவாதிக்கவுள்ளார். முன்னதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமாராவ் மற்றும் தூதரக அதிகாரிகளை சந்தித்து பேசினார் கிருஷ்ணா. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்