முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு தொடங்கியது

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,செப்.- 29 - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இதனை கண்டுகளித்தனர். வரும் 6 -ம் தேதி வரை இந்த கொலு பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். சாத்கம், சைவம், கணபதியம், கெளமரம் என்ற பக்தி கொள்கைகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளிலும் தலா 7 படிகள் கொண்டதாக இந்த கொலு, நவராத்திரி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மந்த்ரா கோல்ட் கோட்டிங்ஸ் என்ற பிராண்டில் தங்க மூலாம் பூசப்பட்ட ஆன்மீகப்பொருட்களை விற்பனை செய்து வரும் சென்னையை சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் நமது அர்ப்பணிப்பின் அடையாளமாக இந்த கொலுவினை ஏற்பாடு செய்துள்ளது. இந்த கொலுவில் 3 அங்குலம் முதல் 3 அடி உயரம் வரை பல்வேறு அளவுகளில் களிமண், தங்க மூலாம் பூசப்பட்ட பித்தளை, மரம், செம்பு,பிளாஸ்டர் ஆப்பாரிஸ்,  காகிதக்கூழ் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களால் உருவாக்கப்பட்ட பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கோபுரக் கலசம், அஸமாணகிரி ஆகியவை மேல் படியில் வைக்கப்பட்டு, தொம்பை, மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு, ஒட்டுமொத்தமாக அந்த கொலு மண்டபமே அழகாக காட்சியளிக்கிறது. இக்கணகாட்சியின் நடுநாயகமாக மதுரை மீனாட்சி அம்மன், சொக்கநாதர், அதிகார நந்தி ஆகிய தெய்வங்கள் வீற்றிருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago