எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர்,நவ.01 - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசிஷ்டி திருவிழா சூரசம்ஹார நிகழ்ச்சி. லட்சக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையில் தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இரண்டாம் படை வீடாகும். வங்க கடலோரம் மிக அழகாக அமைந்துள்ள திருத்தலம். இத்திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அவற்றுள் மிக மிக முக்கியமான திருவிழா சூரசம்ஹார திருவிழா ஆகும். தேவர்களின் உரைகளை கேட்ட சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றியவர் சுப்பிரமணிய சுவாமி. சிவபெருமானின் சக்தியாக வெளிப்பட்ட சுப்பிரமணியசாமி சுவாமி சூரனை வதம் செய்து ஆட்கொண்ட திருத்தலம் திருச்செந்தூராகும்.
இத்திருத்தலத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்கும் முருகப்பெருமானின் அருளை வேண்டியும் கடந்த 26ம் தேதி முதல் கந்தசிஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய நாள்முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோவில் உள்ளேயும், வெளிப்பிரகாரங்களிலும் தற்காலிக மற்றும் நிரந்தர மண்டபங்களிலும், கோவில் மற்றும் தனியார் விடுதிகளிலும் கடுமையான விரதம் மேற்கொண்டுள்ளார்கள். இந்தியா மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, லண்டன், அமெரிக்கா, ஐப்பான் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விரதம் இருக்கிறார்கள்.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 1.30க்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. காலை 10 மணிக்கு மூலவருக்கும் யாகசாலையில் ஸ்ரீஜெயந்திநாதருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பகல் 11.30 மணிக்கு உச்சிக்காலை தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வாணையுடன் தங்க சப்பறத்தில் மேள தாளங்கள் முழங்க பக்தர்களின் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்கள் பாட சண்முகஉலாச மண்டபம் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து திருவாவடுதுறை ஆதியினம் கந்தசிஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 4.40 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் பக்தர்கள் புடை சூழ கடற்கரையில் சூரசம்ஹாரத்திற்கு கிளம்பினார். முதலில் சாரகசூரன் யானை முகத்துடன் முருகப்பெருமானிடம் சண்டையிடும் காட்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிங்கமுகாசூரன் வதம் நடபெற்றது. அதனையடுத்து ஆணவமே உருவான சூரபத்மன் முருகப்பெருமானிடம் சண்டையிடும் காட்சி நடைபெற்றது. சூரனை வதம் செய்யும் பொழுது கடற்கரையில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்கள் விண்ணதிர சூரசம்ஹாரம் நடைபெற்றது. மாயமான சூரபத்மன் சேவல் உருக்கொண்டு முருகனிடம் போரிட வந்தான். சூரபத்மனின் மாயத்தோற்றத்தில் வந்த சேவலை முருகபெருமான் தனது கொடியாக மாற்றிக் கொண்டார். இந்த நிகழ்வு நடைபெற்ற போது வானத்தில் கருடன் மூன்று முறை வலம் வந்தது. இந்த காட்சியை கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.
சூரசம்ஹாரம் முடிந்தபின் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோஷமண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஜெயந்திநாதர் வள்ளி தெய்வாணையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோவில் உள்ளே உள்ள 108 மகாதேவ சன்னதி அடைந்தார். அங்கு சுவாமிக்கு எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்பட்டு அந்த கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு யாகசாலையில் 6 நாளும் பூஜை செய்யப்பட்ட கும்பங்களில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் கையில் தகடு கட்டிக் கொண்டார்கள். இன்று காலை 6 மணிக்கு தெய்வாணை அம்பாள் தபசு கோலத்தில் தெப்பக்குளம் அருகே உள்ள மண்டபத்திற்கு எழுந்தருவார். மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் தங்கமயில் வாகனத்தில் தெப்பக்குளம் அருகே மடத்தில் தபசு கோலத்தில் இருக்கும் தெய்வாணை அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள்மாலை மாற்றும் காட்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இரவு திருப்பணி மண்டபத்தில் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
முன்னதாக சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் மேலக்கோவில் என்றழைக்கப்படும் சிவன் கோவிலில் இருந்து ஊர்வலமாக தனது பரிவாரங்களுடன் 8 வீதிகளிலும் வலம் வந்து திருக்கோவில் கடற்கரையில் வந்தடைந்தார். சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைக்காண கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், அறநிலைத்துறைய ஆணையர் சந்திரகுமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, இந்துசமயஅறநிநிலையத்துறை செயலாளர் ராஜேந்திரன், ராம்கோ சிமெண்ட் உரிமையாளர் ராமசுப்பிரமணிய ராஜா, திருக்கோவில் பிரசாத ஸ்டால் உரிமையாளர் ஹரிகரமுத்து, ஹோட்டல் மணி ஐயர் உரிமையாளர் மூர்த்தி, ரமணி, ஆனந்த், சிவமுருகன் லாட்ஜ் உரிமையாளர் அருள், அர்ச்சனா ஹோட்டல் உரிமையாளர் கிட்டப்பா, திருச்செந்தூர் பேரூராட்சி ஒன்றிய தலைவர் சுரேஷ் பாபு, ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் ஹேமலதா, நகர செயலாளர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், அசோக் பவன் உரிமையாளர் ராஜா, திருக்கோவில் இணை ஆணையர் பாஸ்கரன், அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி, திருச்செந்தூர் பேரூராட்சிமன்ற உறுப்பினர்கள் அரசு இந்திர மீனா, சுப்புலெட்சுமி, மணிகண்டன், லெட்சுமணன், ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வினோத், மலேசியாவை சேர்ந்த டப்போ எஸ். தவராஜா, தத்தின் ருக்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயார் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் இசக்கி, பிரதாபன் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். ஊர்காவல் படை சார்பில் 500 ஊர்காவல் படை தொண்டர்கள் பக்தர்களை வரிசையில் ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். திருச்செந்தூர் செயல் அலுவலர் சுப்பையா தலைமையில் நூற்றுக்கணக்கான சுகாதார பணியாளர்கள் நகரில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருக்கோவில் வளாகத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் கந்தசிஷ்டி திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டு களித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஸ் குமார் நேரடியாக திருச்செந்தூர் வந்து சூரசம்ஹார நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள். பல்வேறு அமைப்புகள் சார்பில் சூரசம்ஹார நிகழ்வுகளை காணவந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சூரசம்ஹாரம் முடிந்தபின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனிதநீராடி முருகனை தரிசனம் செய்து தங்கள் விரதத்தை முடித்துக் கொண்டார்கள். கடந்த 6 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த திருச்செந்தூரில் நேற்று சூரசம்ஹாரத்தன்று காலை 10 மணி முதல் மழையில்லாமல் வெயில் எடுத்ததை பக்தர்கள் சந்தோசமாக பேசிக்கொண்டார்கள். தெய்வசக்தியின் மூலம் தான் மழை இல்லாமல் சூரசம்ஹார நிகழ்ச்சியை பார்க்க இறைவன் அருள் செய்தான் என்று மனநிறைவோடு பேசிக்கொண்டு சென்றார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் உருவாகிறது மேலும் ஒரு புயல் சின்னம் : 8 மாவட்டங்களில் இன்று கனமழை
17 Nov 2025சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற 22-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: வரும் 24-ம் தேதி கொடியேற்றம்
17 Nov 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இன்று 89-வது நினைவு நாள்: வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை
17 Nov 2025சென்னை : வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளை முன்னிட்டு அரவது சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
-
ரஷ்யாவிடம் 25,500 கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா
17 Nov 2025புதுடெல்லி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியது.
-
காந்தா திரைவிமர்சனம்
17 Nov 20251950களின் காலக்கட்டத்தில் சேலம் மாடன் ஸ்டுடியோவில் பிரபல நடிகர் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக்க் கொண்டு உருவ
-
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பயன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Nov 2025சென்னை, ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனா் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ தகவல் மையங்கள்: அமைச்சர்
17 Nov 2025சென்னை, சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையங்கள் செயல்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம்
17 Nov 2025திஸ்பூர் : அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கப்படவுள்ளது.
-
பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்
17 Nov 2025பாட்னா, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார். கவர்னர் முகமது கானிடம் தனத் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
-
சவுதியில் பேருந்து விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
17 Nov 2025துபாய் : மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் 45 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆண்பாவம் பொல்லாதது படக்குழு
17 Nov 2025டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.
-
கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வழக்கு
17 Nov 2025சென்னை : பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
17 Nov 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு செய்யப்படுகிறது.
-
வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது : உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
17 Nov 2025சென்னை : வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு
17 Nov 2025மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
-
சிசு படத்தின் 2-ஆம் பாகம் ரோட் டு ரிவெஞ்ச்
17 Nov 2025ஜல்மாரி லாண்டர் இயக்கத்தில் இம்மாதம் 21 ந்தேதியன்று வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ரோட் டு ரிவெஞ்ச்’.
-
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவிமர்சனம்
17 Nov 2025பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், தன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
-
கள்ளக்குறிச்சி: பெற்றோரை இழந்து தவிக்கும் 4 குழந்தைகளுக்கு உதவ மாவட்ட கலெக்டருக்கு முதல்வர் உத்தரவு
17 Nov 2025கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவையான உதவிகளை செய்ய மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி மூலம் உத்
-
இயற்கை விவசாயிகள் மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகை
17 Nov 2025கோவை : கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வருகிறார்.
-
42 இந்தியர்கள் உயிரிழப்பு : பிரதமர் மோடி இரங்கல்
17 Nov 2025புதுடெல்லி : சவுதி அரேபியாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 45 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வரும் 2028-ல் சந்திரயான்-4 ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
17 Nov 2025கொல்கத்தா : 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் தெரிவித்தார்.
-
தீர்ப்பு ஒரு தலைபட்சமானது: மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா விமர்சனம்
17 Nov 2025டாக்கா: வங்காள தேச முன்னாள் பிரதமர் மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா கருத்து தெரிவித்துள்ளார்.
-
சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு: 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு
17 Nov 2025கேரளா, துவார பாலகர் சிலையில் தங்கம் திருட்டு தொடர்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து வருகிறது.
-
ரஷ்யாவில் மாயமான இந்திய மாணவரின் உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது
17 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் மாயமான இந்திய மாணவரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டது.
-
ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர்
17 Nov 2025சென்னை : ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உயர்கல்வித்துறை அ


