காமன்வெல்த் ஊழல்: கல்மாடி உதவியாளரும் சிக்குகிறார்

Image Unavailable

புது டெல்லி, நவ. - 12 - காமன்வெல்த் போட்டிகளில் நடைபெற்ற ஊழல்களை விசாரித்து வரும் சி.பி.ஐ. கல்மாடியின் உதவியாளர் ஆர்.கே. சசேத்தியை விசாரிக்கவுள்ளது. இவர் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு குழுவின் இணை இயக்குனர் ஆவார்.  காமன்வெல்த் போட்டியின் போது நிதி ஒப்பந்தப் புள்ளிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக இவரை சி.பி.ஐ. விசாரிக்க உள்ளது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் இது தொடர்பாக சி.பி.ஐ. க்கு பரிந்துரைத்துள்ளது. சி.பி.ஐ. க்கு சசேத்தியின் சதி நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை சி.வி.சி வழங்கியுள்ளது.  சசேத்தியை ஒருங்கிணைப்பு குழுவின் இணை இயக்குனராக நியமித்த விவகாரத்தில் ஒலிம்பிக் கமிட்டியின் அலுவலர்களும் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர் பொறுப்பு மிக்க பதவியில் போதிய கல்வியறிவும் நிபுணத்துவமும் இல்லாத ஒருவர் நியமிக்கப்பட்ட விவகாரத்தை மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் கண்காணிப்பு அலுவலருக்கு அனுப்பி உள்ளதாகவும், அவரது விசாரணையை அடுத்து இந்த விவகாரம் சி.பி.ஐக்கு அனுப்பப்படும் என்றும் சி.வி.சி. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வழக்கில் சுரேஷ் கல்மாடி, காமன்வெல்த் ஏற்பாட்டு குழுவின் முன்னாள் செயலர் லலித் பளோட் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ