முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசியான் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகள் முன்னேற்றம் அடையும் - மன்மோகன் சிங்

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

பாலி, நவ. 20- ஆசியான் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும் அதற்கு இந்தியா ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும்  பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில்  தென் கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மன்மோகன் சிங் உரை நிகழத்தினார். அப்போது அவர் கூறுகையில்  தென் கிழக்கு  ஆசிய நாடுகளுக்கும் ( ஆசியான் நாடுகளுக்கும் ) இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும் இதற்கு இந்தியா முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும்  கூறினார். சேவைகள் மற்றும் முதலீடுகள் ஒப்பந்தங்களை ஆசியான் அமைப்பில் உள்ள 10 நாடுகளும் விரைந்து இறுதி  செய்ய வேண்டும் என்றும் அதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தியாவுக்கும் இந்நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.கடந்த 2003 ம் ஆண்டு  ஆசியான் நாடுகளுக் கும் இந்தியாவுக்கும் இடையே  கூட்டு செயல் திட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக  இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையே விரிவான பொருளாதார ஒப்பந்தம் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தங்களை அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஆசியான் நாடுகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். வருகிற 2012 மார்ச் மாதத்திற்குள் புதிய ஒப்பந்தங்களை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆசியான் அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்தியாவுக்கும்  இடையே ஏற்கனவே தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் கிட்டத்தட்ட  செய்யப்பட்டு விட்டன என்றும்  இந்த ஒப்பந்தத்தை  கம்போடியா நாடு கடைசியாக கடந்த ஆகஸ்டில் செய்து கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். கடந்த 20 ஆண்டுகளில் ஆசியான் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான  உறவுகள் விரைவான வளர்ச்சியை கண்டுள்ளன என்றும் இந்த உறவுகள் மேலும் வலுப்பெற வேண்டும் என்றும் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.  முன்பெல்லாம் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியா தனித்தனியாகத்தான் உறவுகளை வைத்திருந்தது என்றும் 1996 க்கு  பிறகுதான் ஆசியான் நாடுகளுடன் இந்தியா கூட்டாக உறவு வைத்துக்கொண்டு வருகிறது என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago