முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரஞ்சீவியின் தயவால் தப்பியது ஆந்திர மாநில காங்கிரஸ் அரசு

புதன்கிழமை, 7 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், டிச.- 7- ஆந்திராவில் முதல்வர் கிரண் குமார் ரெட்டி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி  அடைந்தது. இதை நடிகர் சிரஞ்சீவி கட்சியின் எம்.எல்.ஏ.க்களால்  ஆந்திர மாநில காங்கிரஸ் அரசு தப்பியது. ஆந்திராவில்  முதல்வர் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை அம்மாநில சட்டசபையில் கொண்டு வந்தது.  ஆரம்பத்தில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி அளிக்க தயங்கிய சபாநாயகர் பிறகு  அதற்கான அனுமதியை வழங்கினார். இந்த ஒரு வரி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை நேற்று முன் தினம் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி  தலைவருமான சந்திரபாபு நாயுடு துவக்கி வைத்து பேசினார். அப்போது கிரண் குமார் ரெட்டி  தலைமையிலான  காங்கிரஸ் அரசு  மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். இந்த விவாதம் ஆந்திர சட்டசபையில் 16 மணி நேரம் நடைபெற்றது. அப்போது பல்வேறு கட்சிகளை சேர்ந்த  எம்.எல்.ஏ.க்களும் விவாதத்தில் பங்கேற்று பேசினார்கள். அதன் பிறகு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.  இந்த பதிலை அடுத்து நேற்று இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 38 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்  ஆந்திர காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றது.  எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 160 எம்.எல்.ஏ.க்களும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போட்டனர். ஒரே ஒரு எம்.எல்.ஏ. நடுநிலை வகித்தார். எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக 16  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டுள்ளனர். இவர்கள்  காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் எனறு தெரிகிறது. இவர்கள் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இந்த  வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு  போட்டாலும் கூட நடிகர் சிரஞ்சீவி கட்சியை  சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டதால்தான் அரசுக்கு ஆதரவாக 160 ஓட்டுகள் கிடைத்துள்ளன. இதனால்தான் இந்த அரசு வெற்றி பெற்றுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது  எதிர்க்கட்சி தலைவர் சந்திர பாபு நாயுடுவுக்கும்  ஒய்.எஸ். ஆர்.  காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் ஒரு பலத்த அடியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் 38 ஓட்டுக்கள்  வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இது முதல்வர் கிரண் குமார் ரெட்டி   மற்றும் அவரது தலைமையிலான அரசுக்கு கிடைத்த வெற்றி என்று சபாநாயகர் என். மனோகர்  கூறியுள்ளார். சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்பதை  மனோகரும் ஒப்புக்கொண்டார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்