முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.அதிபர் ஜர்தாரி பக்கவாத நோயாலும் பாதிப்பு: சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார்

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,டிச.- 10 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி பக்கவாத நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் சிகிச்சைக்காக துபாயில் இருந்து லண்டன் செல்கிறார். ாகிஸ்தான் அதிபராக இருக்கும் ஜர்தாரிக்கு கடந்த பல நாட்களுக்கு முன்பு லேசான மாரடைப்பு ஏற்பட்டது என்றும் இதனையொட்டி அவர் சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார் என்றும் செய்தி வெளியானது. துபாயில் சிகிச்சை முடிந்து கடந்த வியாழக்கிழமையே இஸ்லாமாபாத்திற்கு திரும்பிவிடுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் துபாய் மருத்துவமனயில் இருந்து ஜர்தாரி திரும்பவில்லை. இந்தநிலையில் அவர் துபாய்க்கு சிகிச்சைக்காக விமானத்தில் சென்றபோது பக்கவாத நோய் அவரை தாக்கியது என்றும் மூளையில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் ஜர்தாரி அபாய கட்டத்தை தாண்டு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் நீயூஸ் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது. ஜர்தாரிக்கு பேச முடியாமல் வாய் லேசாக திக்குகிறது என்றும் அதனால் அவருக்கு உடல் மற்றும் பேச்சு பயிற்சி தேவையாக இருக்கிறது என்றும் அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்லலாம் என்றும் செய்தி வெளியாகி உள்ளது. ஜர்தாரிக்கு கடந்த செவ்வாய் கிழமை பக்கவாத நோய் ஏற்பட்டது என்றும் மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் மற்றொரு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது ஜர்தாரி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜர்தாரி மெகா ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று வற்புறுத்தல் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் துபாய் சென்றபோது அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாகவும் வதந்திகள் பரவின. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்