முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி நாட்டின் தலைநகராகி 100 ஆண்டுகள் பூர்த்தி

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,டிச.13 - டெல்லி நகரமானது நாட்டின் தலைநகராகி 100 ஆண்டுகள் நேற்றுடன் பூர்த்தியானதையொட்டி டெல்லி நகர மக்களுக்கு லோக்சபையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. வெள்ளையர்கள் முதலில் கொல்கத்தாவில் ஊடுருவி வேரூன்றிவிட்டார்கள். கொல்கத்தாவையையே இந்தியாவின் தலைநகராக வைத்து செயல்பட்டார்கள். பின்னர் கொல்கத்தாவை விட்டுவிட்டு டெல்லியை தலைநகராக்கினார்கள். அதிலிருந்து டெல்லி நகரம் விரிவடையத்தொடங்கிவிட்டது. அந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் தொடர்பு அதிகரித்தது. டெல்லியில் மக்கள் பெருக்கம் ஏற்படத்தொடங்கியது. டெல்லி தலைநகராகி நேற்று 100 ஆண்டுகள் பூர்த்தி ஆனதை லோக்சபை சபாநாயகர் மீரா குமார் நேற்று சபையில் தெரிவித்தார். டெல்லி நகரமானது அனைத்து துறைகளிலும் மேலும் துரித வளர்ச்சி ஏற்பட வாழ்த்து தெரிவித்தார். டெல்லி தலைநகராகி 100 ஆண்டுகள் ஆனதையொட்டி நாடு முழுவதும் விழா கொண்டாடப்படுகிறது. கடந்த 1911-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி நாட்டின் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது. இது குறித்து டெல்லியில் உள்ள தர்பார் மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது சபாநாயகர் மீரா குமார் தெரிவித்தார். நாட்டிலேயே அதிக பரப்பளவு உள்ள நகரமாகவும் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தையும் பிடித்து வளர்ந்துள்ளது. உலகிலேயே ஒரு சிறந்த தலைநகரமாக மட்டுமல்லாது அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உலக தரத்தில் செய்யப்பட்டிருப்பதோடு அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டிடங்களும் வானளாவிய உயரத்திற்கு கட்டப்பட்டு கீர்த்தியுடன் விளங்குகிறது என்றும் மிராகுமார் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்