முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் கண்டிப்பாக ஆட்சி மாறும்: அஜீத்சிங் திட்டவட்டம்

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டிச.- 20 - உத்தரபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக நிகழும் என்று சமீபத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சேர்ந்த ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான அஜீத்சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் நிருபர்களைச் சந்தித்த அஜீத்சிங் கூறியதாவது:​- உத்தரபிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் அடக்குமுறையால் மக்கள் கொதித்துப் போய் உள்ளார்கள். எங்களது காங்கிரஸ் - ராஷ்ட்ரீய லோக்தளம் கூட்டணிதான் இதற்கு சிறந்த மாற்றாக இருக்கும். இப்போது எங்கள் கவனம் முழுவதும் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலைப்பற்றியே உள்ளது. உத்தரபிரதேச மக்களிடம் ஒரு புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதனால் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக நிகழும். மாயாவதி அரசு தூக்கி எறியப்படும் என்றார். உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 20 வருடங்களுக்கு மேலாகவே ஆட்சியை பிடிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி வருகிறது. இந்நிலையில் கடந்த எம்.பி. தேர்தலில் கணிசமான தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி இந்த சட்டசபை தேர்தலில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் உ.பி.யின் ஒருபகுதியில் செல்வாக்கு பெற்ற ராஷ்ட்ரீய லோக்தள் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்