முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு விவகாரம்: பழ.நெடுமாறன் அறிக்கை

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.23 -  முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்துக்கு பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரளம் நேக்கிச் செல்லும் சாலைகளில் முற்றுகைப் பேராட்டம் நடத்துவதற்காகச் சென்ற என்னையும் வைகோவை மற்றும் பலரையும் சீலையம்பட்டி அருகே வழிமறித்து காவல்துறையினர் கைது செய்தனர்.

இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கூடலூர் மற்றும் லோயர் கேம்ப் பகுதிகளில் அறப்பேராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் தாக்கிய காவல்துறையின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்கள், செய்தியாளர்கள் உள்பட பலரும் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அத்துமீறிச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பெரியாறு அணைப் பிரச்சினைக் குறித்து தன்னெழுச்சியானப் பேராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் மக்களை ஒடுக்கும் முயற்சியை மேற்கொள்வது என்பது தமிழகத்தின் நலனுக்கு எதிரானதாகும். மக்களோடு இணைந்து தமிழக அரசும் இந்தப் பேராட்டத்தில் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டிக்கெள்கிறேன்.

இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்