முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீக்கியர்களுக்கு தனி திருமண சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,டிச.- 13 - சீக்கியர்களுக்கு தனி திருமண சட்டத்தை திரும்பக்கொண்டுவர மத்திய உள்துறை அமைச்சகம் எண்ணியிருப்பதாகவும் இது தொடர்பாக மத்திய கேபினட்டை அணுகவும் முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.  கடந்த 1955-ம் ஆண்டு வரை சீக்கியர்களுக்கென்று தனி திருமண சட்டம் இருந்தது. அதன் பின்னர் இது நீக்கப்பட்டு இந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் ஜெயின் மதத்தினர் இந்துமத திருமண சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. பின்னர் தங்களுக்கென்று தனி திருமண சட்டம் வேண்டும் என்று சீக்கியர்கள் நீண்டகாலமாக கோரி வந்தனர். இந்தநிலையில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் சீக்கியர்களுக்கு மீண்டும் தனி திருமண சட்டம் கொண்டுவர திட்டமிட்டிருப்பதாகவும் இது தொடர்பாக மத்திய கேபினட் அமைச்சரவையை அணுக முடிவு செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தனியாக ஆனந்த் திருமணம் சட்டம் கொண்டு வந்து சீக்கிய மதத்தின் கீழ் சட்டப்பூர்வ அனுமதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் கருதுவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 1955-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை சீக்கிய திருமணம் இந்துமத சட்டத்தின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்கு முன்பு ஆனந்த் திருமண சட்டத்தின் கீழ் சீக்கிய திருமணம் நடைபெற்றது. குரு கிராந்த் சாஹிப் முன்னிலையில் திருமணம் நடக்கும் இது கடந்த 1955-ம் ஆண்டு வரை நடைபெற்றது. பின்னர் ஆனந்த் திருமண சட்டம் நீக்கப்பட்டு இந்து திருமண சட்டத்தில் சீக்கிய திருமணம் கொண்டு வரப்பட்டது. இந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், சைன மதத்தினர் இந்து திருமண சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டனர். இந்தநிலையில் சீக்கியர்களுக்கு தனியாக திருமண சட்டம் கொண்டு வரும் திட்டத்திற்கு மத்திய கேபினட் அமைச்சைரவை ஒப்புதல் அளித்த பின்னர் இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது பாராளுமன்றத்தில் நிறைவேறிய பின்னர் சீக்கியர்கள் அந்த புதிய சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் இதற்கான மசோதா நடப்பு பாராளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்