முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாய பல்கலை. மசோதாவுக்கு ராஜ்யசபையில் எதிர்ப்பு

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.29 - ராணி லட்சுமிபாய் மத்திய விவசாய பல்கலைக்கழக மசோதாவுக்கு ராஜ்ய சபையில் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் ஏற்பட்ட அமளியை அடுத்து ராஜ்ய சபை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் ராஜ்ய சபையில் நேற்று மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார், ராணி லட்சுமி பாய் மத்திய விவசாய பல்கலைக்கழக மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது பா.ஜ.க. மற்றும் இடது கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள்  இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். 

இந்த விவசாய பல்கலைக்கழகம் என்பது மாநில அரசின் வரம்பிற்கு உட்பட்டது என்றும், அதை  மத்திய அரசு எப்படி சபையில் தாக்கல் செய்யலாம் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் இது மத்திய பல்கலைக்கழகம் என்பதால் இது தொடர்பான மசோதாவை மத்திய அரசுதான்  தாக்கல் செய்யும் என்று விளக்கினார்.

இந்த நேரத்தில் சபையின் துணைத் தலைவர்  ரஹ்மான்கான் குறுக்கிட்டு 

இந்த மசோதா குறித்து ஏற்கனவே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று வினவினார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய இடது கம்யூனிஸ்டு எம்.பி. ராஜீவ்,  இந்த மசோதா காலையில்தான் சுற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

ஆனால் இந்த பிரச்சினை குறித்து இதற்கு மேல் பேசக்கூடாது என்று ரஹ்மான் கூறினார்.

ஆனால் அவரது கட்டளையை ற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபையை சுமார் அரை மணி நேரத்திற்கு துணைத் தலைவர் ரஹ்மான்கான் ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்