முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

``தானே'' புயல் எதிரொலி: கொண்டாட்டங்கள் பாதிப்பு

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.29 - தமிழகத்தை மிரட்டும் தானே புயலால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழக்கப்போகின்றது. எந்த ஆண்டிலும் இல்லாத அளவு இந்த ஆண்டு கடும் மழையுடன் 2012-ம் ஆண்டு புத்தாண்டு பிறக்க போகிறது. புத்தாண்டு என்றாலே மகிழ்ச்சியும் சந்தோஷமும் தான். மதவேறுபாடு இல்லாமல் சந்தோஷமாக ஒருவொருக்கொருவர் வாழ்த்து கூறுவதும், இரவு 10 மணி துவங்கி விடிய விடிய தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். வீடுகளின் வாசல் தோறும் பெண்கள் விதவிதமான கலர் பொடிகளில் தங்களின் திறமையை காண்பித்து அழகழகாக கோலம் போடுவர். ஓட்டல்களில் நட்சத்திர விடுதிகளில் இரவு முழுவதும் விருந்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும்.

அதிகாலையில் இந்துமத கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். சென்னையில் ஆண்டு தோறும் அண்ணாசாலை, பெசன்ட்நகர், எலியட்ஸ் பீச், சென்னை கடற்கரை சாலையில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதும், இருசக்கர வாகனங்கள், கார்களில் பலூன்களை கட்டி தொங்கவிட்டு வேகமாக சாலைகளில் சென்றபடி சாகசத்தில் இளைஞர்கள் ஈடுபடுவதும் காணலாம்.

புத்தாண்டு பிறக்கும் இரவு 12 மணிக்கு சாலை முழுவதும் ஒருவொருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவிப்பார்கள். அத்து மீறுபவர்களை கண்காணிக்க சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு இவைகளுக்கெல்லாம் வேட்டு வைக்க போகிறது. ``தானே'' புயல். ஏற்கனவே சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் கடுமையான பனி பொழிவு இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் சாலையில் எதிரே வருபவர்கள் தெரியாத அளவு மக்களை முடக்கி போட்டுள்ளது. இப்போது வங்கக்கடலில் புதிதாக தானே புயலும் சேர்ந்துள்ளது.

வங்கக்கடலில் தமிழகத்திற்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறி தமிழகத்திற்கு 500 கி.மீ. தொலைவில் உள்ளது தானே என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 3 தினங்களுக்கு கடும் காற்றும், சூறாவளியும் கடும் மழையும் இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கடலூர் ஆந்திர கடலோரம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் அன்று கடும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடுமையான பாதிப்பை உண்டாக்கும். இதனால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்படும். எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்த ஆண்டு புத்தாண்டு கடும் மழையுடன் பிறக்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!