முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மையினருக்கு ஏராளமான திட்டங்கள் அறிமுகம்

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.30 - சிறுபான்மையின மக்களுக்கு ஏராளமான நல்வாழ்வுத்திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். டெல்லியில் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் குறித்த மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், சிறுபான்மையின மக்களுக்கு சச்சார் கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையில் ஏராளமான நல்வாழ்வுத் திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது என்றார். இந்த திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார். 

சிறுபான்மையினர் நலன்கள் குறித்த சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று சிலர் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையல்ல. சச்சார் கமிட்டியின் யோசனைகளை ஏற்று பல்வேறு நலத்திட்டங்களை சிறுபான்மையின மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார். இதுபோன்ற நலத்திட்டங்களினால் சிறுபான்மையினர் மத்தியில் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். 

மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் சிறுபான்மையின மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு வேலைகளில் சேரும் சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்து வருகிறது. பாதுகாப்பு படை பிரிவுகள், வங்கி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிறுபான்மையின மக்களின் வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சிறுபான்மையின மக்களுக்கா வழங்கப்படும் கடன்களின் எண்ணிக்கை 9 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்