முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமி பாலியல் தொல்லை வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.- 3 - கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி. மெட்ரிகுலேஷன் பள்ளியில் யு.கே.ஜி. படிக்கும் மாணவி ஒருவருக்கு அந்தப்பள்ளி ஆசிரியைகளால் பாலியல் தொல்லை ஏற்படுவதாகப் புகார் எழுந்ததையடுத்து வழக்குத் தொடரப்பட்டது. கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி. மெட்ரிக்குலேசன் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்த 4 வயது சிறுமிக்கு அப்பள்ளி ஆசிரியை கோஷியா, தலைமை ஆசிரியை லெசி போஸ்கோ ஆகியோரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர்.   இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ, விசாரிக்க கேட்டு மனித உரிமை ஆர்வலர் ராமலிங்கம் என்பவர் சென்னை உயர்நீnullதிமன்றத்தில்  பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீnullதிபதி இக்பால், nullநீதிபதி சிவஞானம் பெஞ்ச், சம்பவம் குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை குறித்த இறுதி அறிக்கையை அட்வகேட் ஜெனரல் நவnullதகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.  அப்போது தலைமை nullநீதிபதி எம்.ஒய். இக்பால் சிறுமியை பரிசோதித்த கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் முரண்பட்ட அறிக்கையை கொடுத்துள்ளனர். ஆகவே, இந்த டாக்டர்கள் அனைவரும் தனித்தனியாக பதில் மனு (பிரமாண வாக்குமூல பத்திரம்) தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதை தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்