முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் பாகிஸ்தானில் இருந்ததே தெரியாது-முஷாரப்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

ஜெருசலேம், ஜன. - 9 - தான் அதிபராக இருந்த போது அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் இருந்தது தனக்கு தெரியவே தெரியாது என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார். இது குறித்து அவர் இஸ்ரேல் நாட்டு நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது,  அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் 5 ஆண்டுகள் இருந்தாராம். அதுவும் எனது ஆட்சிக் காலத்தில் 2 ஆண்டுகள் இருந்தாராம். ஆனால் அது எனக்கு தெரியவே தெரியாது. நான் சொல்வது முற்றிலும் உண்மை. அவர் தங்கியிருந்த பகுதி மக்களுக்கே அவர் அங்கிருந்தது தெரியாது. அவர் வசித்த வீட்டுக்கு அருகே வசிக்கும் அக்கம்பக்கத்தினருக்கே அவர் அங்கிருந்தது தெரியாது. பின்லேடன் உயரமான சுற்றுச் சுவருள்ள பெரிய வீட்டில் தங்கியிருந்தார் என்று மேற்கத்திய நாடுகளில் பேச்சு உள்ளது. ஆனால் அது உண்மையில்லை. பாகிஸ்தானில் ஒருவர் வீடு கட்டினால் சுற்றுச்சுவர் கட்டுவது வழக்கம். இது மேற்கத்திய நாடுகளுக்கு வேண்டுமானால் வித்தியாசமாக தெரியலாம். எங்களுக்கு அப்படி தெரியவில்லை. சந்தேகமும் ஏற்படவில்லை என்றார் முஷாரப். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்