முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடக்கோவில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், ஜன. - 21 - மேல உரப்பனூர் மற்றும் கூடக்கோவில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார். மேல உரப்பனூர் அரசு கள்ளர் மேல்நிலை பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அரசின் இலவச சைக்கிள்களை 102 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். மேலும் ஆதி திராவிட மாணவிகள் 10 பேருக்கு கல்வி உதவித் தொகையையும் அவர் வழங்கினார்.  கூடக்கோவில் நாடார் மேல்நிலை பள்ளியில் நடந்த கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவில் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 215 மாணவ, மாணவியருக்கு ரூ. 3 லட்சத்து 22 ஆயிரத்து 500 கல்வி உதவித் தொகையை வழங்கினார். மேலும் 188 பேருக்கு இலவச சைக்கிள்களையும் அவர் வழங்கினார். இவ்விழாவில் மதுரை புறநகர் மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன், தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி, யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன், கள்ளிக்குடி .சேர்மன் உலகாணி மகாலிங்கம், ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகர செயலாளர் விஜயன், மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர், ஒன்றிய கவுன்சிலர் பழனிசாமி, சார்பு அணி செயலாளர் கூடக்கோவில் முருகன், மேல உரப்பனூர் ஊராட்சி தலைவர் சாமிநாதன், தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜன், துணை சேர்மன் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் அன்னலெட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியை கலைராணி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்