முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய கட்டிங்கள்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜன.25 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (24.1.2012) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் 49 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களைக் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், 7 கோடியே 71 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட 20 ஆரம்ப சுகாதார நிலையங்களைக் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 45 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அவசர சிகிச்சைப் பிரிவு, நுண்கதிர் பிரிவு, விபத்து பிரிவு, பெண்கள் பிரிவு, தீக்காயப் பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, பொது மருத்துவப் பிரிவு, அறுவை அரங்கம் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு பிரிவு, என அனைத்து வசதிகளுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட ஐந்து மாடிகள் கொண்ட புதிய கட்டடம், மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டடம் ஆகிய கட்டங்களையும், தமிழகத்தில் அரசு வட்ட மருத்துவமனைகளை மேம்படுத்தும் விதமாக,  கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் அரசு வட்ட மருத்துவமனையில் 1 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் புறநோயாளிகள் பிரிவு மற்றும் 18 படுக்கை வசதிகள் கொண்ட மகப்பேறு மருத்துவப் பிரிவு ஆகியவற்றிற்காக கட்டப்பட்ட கட்டடங்களையும், திருப்ர் மாவட்டம், தாராபுரம் அரசு வட்ட மருத்துவமனையில் 1 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 24 படுக்கைகள் வசதியுடன் கூடிய ஆண்கள் பிரிவு மற்றும் 24 படுக்கைகள் வசதியுடன் கூடிய பெண்கள் மருத்துவப் பிரிவு ஆகியவற்றிற்கான கட்டடங்களையும், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு வார்டு ஆகியவற்றிற்கான கட்டடங்களையும், ஆக மொத்தம் 49 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும், திருப்ர் மாவட்டம், தாராபுரத்தில், 49 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அலுவலகக் கட்டடத்தையும்,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும்,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் சுகாதாரத் தேவைகளை ர்த்தி செய்யும் பொருட்டு,  புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தோற்றுவிக்க உத்தரவிட்டிருந்தார்.  தமிழக முதலமைச்சரின் ஆணையின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் ​ சமயபுரம்; வேலூர் மாவட்டம் ​ கொணவட்டம், சுமைதாங்கி, கொரட்டி; விழுப்புரம் மாவட்டம் ​ சேந்தநாடு, அம்மாகளத்தூர்; ஈரோடு மாவட்டம் ​ காஞ்சிக்கோயில், மலையப்பாளையம்; கரூர் மாவட்டம் ​ வடக்குபாளையம், தும்பிவாடி; கிருஷ்ணகிரி மாவட்டம் ​ பேகப்பள்ளி; நாகப்பட்டினம் மாவட்டம் ​ மாதிரவேலூர்; திருப்ர் ​ புளியம்பட்டி; பெரம்பலூர் மாவட்டம் ​ இளம்பலூர்; திண்டுக்கல் மாவட்டம் ​ கானப்பாடி; திருநெல்வேலி மாவட்டம் ​ தென்மலை; திருவள்ளூர் மாவட்டம் ​ கல்யாணகுப்பம்; புதுக்கோட்டை மாவட்டம் ​ ராசல்; தஞ்சாவூர் மாவட்டம் ​ ஓக்கநாடுகீளையூர்; தூத்துக்குடி மாவட்டம் ​ லூர்தம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் 7 கோடியே 71 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட 20 ஆரம்ப சுகாதார நிலையங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர்,  செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர், மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்