முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தானே புயல் நிவாரண நிதி ரூ.24.27 கோடி குவிந்தது

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.26 - தானே புயல் நிவாரண நிதிக்கு இதுவரை 24 கோடியே 27 லட்சத்து 42 ஆயிரத்து 932 ரூபாய் குவிந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் 30.12.2011 அன்று தமிழகத்தை தாக்கிய தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று (25.1.2012) தலைமைச் செயலகத்தில் கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள்.

1.சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் சா. துரைசாமியின் சொந்த பங்களிப்பான 3 லட்சம் ரூபாயுடன் சேர்த்து 1 கோடி ரூபாய்.  2.முருகப்பா குழுமத்தின் செயல் தலைவர் ஏ.வெள்ளையன் ​ 1 கோடி ரூபாய். 3.சுஸ்லான் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்துள்சி ஆர். டான்டி 1 கோடி ரூபாய். 4.வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம் மற்றும் தாளாளர்  எம்.வி.எம். வேல்முருகன் ​ 50 லட்சம் ரூபாய். 5.கும்மிடிப்ண்டி, ஆர்.எம்.கே. இன்ஜினியரிங் கல்லுரியின் தலைவர் திரு. ஆர். முனிரத்தினம் மற்றும் துணைத் தலைவர் ஆர்.எம். கிஷோர் ​ 25 லட்சம் ரூபாய். 6.சென்னை, விஜயா குழும மருத்துவமனைகளின் முதன்மை செயல் அலுவலர் பி. பாரதி ரெட்டி 20 லட்சம் ரூபாய். 7.திருச்செங்கோடு, வித்யா விகாஸ் கல்வி நிலையங்கள் மற்றும்  அறக்கட்டளையின் நிர்வாக பொறுப்பாளர் டாக்டர் டி.ஓ. சிங்காரவேல் 10 லட்சத்து 8 ரூபாய். 8.கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசுவாமி 10 லட்சம் ரூபாய்.

தமிழக முதலமைச்சரிடம் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக 4 கோடியே 15 லட்சத்து 8 ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று (25.1.2012) அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 24 கோடியே 27 லட்சத்து 42 ஆயிரத்து 932 ரூபாயாகும்.

இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!