முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்.21-க்கு முன் சங்கரன்கோவில் இடைத்தேர்தல்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.26 - சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 21-ம் தேதிக்கு முன் நடைபெறும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். தேசிய வாக்காளர் தின விழா கிண்டி கவர்னர் மாளிகை தர்பார் மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கவர்னர் ரோசய்யா தலைமை வகித்தார். மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வரவேற்றார். தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, மாநில தேர்தல் ஆணையர் சோ அய்யர் பேசினர். 

விழாவுக்கு பின் பிரவீன்குமாரிடம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் எப்போது என நிருபர்கள் கேட்டனர். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் ஏப்ரல் 21-ம் தேதிக்கு முன்னர் கண்டிப்பாக நடைபெறும். ஆனால் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் என்பதால் மக்களுக்கு பெரிய அளவில் தொந்தரவு இருக்காது. ஆனாலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. பொதுத்தேர்வு விஷயங்கள் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெற வேண்டிய இடைத் தேர்தல் ஆகியவற்றின் அடிப்படையில் சங்கரன்கோவில் இடைத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago