எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, மார்ச் 25 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கில் இம்மாத இறுதியில் தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட இருக்கும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தி.மு.க.வின் கலைஞர் டி.வி.யும் இடம் பெறும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2008-ம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்தது.
இதை அடுத்து சி.பி.ஐ. மேற்கொண்ட விசாரணையை அடுத்து அந்த ஒதுக்கீடுகளை செய்த அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இதை அடுத்து ஆ.ராசா டெல்லியில் உள்ள அதிக பாதுகாப்பு மிகுந்த திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் வருகிற 31-ம் தேதி டெல்லியில் தனிக்கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது அப்போதைய உதவியாளர்கள் ஆர்.கே.சந்தோலியா, சித்தார்த் பெஹூரா, தொழில் அதிபர் ஷாகீத் உஸ்மான் பல்வா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பலன் அடைந்த ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஒயர்லஸ் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெறும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குற்றப்பத்திரிகைக்கு இறுதி வடிவம் கொடுத்து வரும் சி.பி.ஐ. தனது ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யாது என்றும் அதற்கு பதிலாக டெல்லி தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் தி.மு.க.வின் கலைஞர் டி.வி.யின் பெயரும் இடம் பெறும் என்றும் சி.பி.ஐ.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2 ஜி.ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பெறப்பட்ட பணத்தில் ரூ.214 கோடியை கலைஞர் டி.வி. பெற்றுள்ளது . ஆனால் அந்த பணத்தை திருப்பி செலுத்தி விட்டதாக கலைஞர் டி.வி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
என்றாலும் இந்த பணம் எதற்காக கொடுக்கப்பட்டது என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் கலைஞர் டி.வி.யின் தலைமை செயல் அதிகாரி சரத்குமார் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என்றும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த குற்றப்பத்திரிகையில் தி.மு.க. எம்.பி.யும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழி பெயர் சேர்க்க இதுவரை சி.பி.ஐ. எந்த முடிவும் எடுத்ததாக தெரியவில்லை ஆனால் இந்த விஷயம் தொடர்பான சட்ட ஆலோசனை கிடைத்த பிறகே சி.பி.ஐ. இறுதி முடிவை எடுக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வழக்கில் சி.பி.ஐ. தனது முதலாவது குற்றப்பத்திரிகையை இம்மாதம் 31-ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய எல்லா விதத்திலும் தயாராகி விட்டது.
சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடுவுக்குள் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.தயாராக உள்ளது. அதன்படி இம்மாதம் 31 ம் தேதி இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் குறித்த சி.பி.ஐ. விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த ஒதுக்கீட்டில் நடந்த கிரிமினல் சதி திட்டங்கள் குறித்த அம்சங்கள் இடம் பெறும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணையின் போக்கை பொறுத்தும் வழக்கில் சேர்க்கப்பட உள்ள குற்றவாளிகளை பொறுத்தும் அடுத்து தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகைகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும் என்றும் சி.பி. ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jul 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்க
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும் : சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jul 2025கடலூர் : தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டெல்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடிகை சரோஜாதேவி உடல் நல்லடக்கம்
15 Jul 2025பெங்களூரு, மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக, கேரள எல்லைகளில் அலர்ட்
15 Jul 2025சென்னை, கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு 2 பேர் பலியானதையடுத்து நீலகிரி மாவட்ட தமிழக - கேரள எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னிலை...
-
100 கோடி மக்களுக்கு முன்மாதிரி: சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
15 Jul 2025புதுடில்லி : விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறி
-
பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி வலைதளங்களில் வீடியோ வைரல்
15 Jul 2025துபாய், பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடிகளில் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
4-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா, ரிஷப் பண்ட் விலகல்? - கேப்டன் சுப்மன் கில் பதில்
15 Jul 2025லண்டன் : 4வது டெஸ்ட் போட்டி; பும்ரா, ரிஷப் பண்ட் விளையாடுவார்களா என்பது குறித்து சுப்மன் கில் பதிலளித்துள்ளார்.
தொடர் சமன்...
-
2-வது அணியாக டெஸ்ட் வரலாற்றில் மே.இ.தீவுகள் அணி மோசமான சாதனை
15 Jul 2025சபினா பார்க் : ஒரு இன்னிங்சில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவுசெய்த 2-வது அணி எனும் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி படைத்துள்ளது.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: இ.பி.எஸ்.க்கு அமைச்சர் பதில்
15 Jul 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த எடப்பாடி பழனிசாமி விமர்சனத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
-
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் யாஷ் தயாளை கைது செய்ய தடை
15 Jul 2025அலகாபாத் : பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-07-2025.
16 Jul 2025 -
சிதம்பரம் தொகுதியின் சீர்திருத்த பிள்ளை: திருமாவளவனுக்கு முதல்வர் புகழாரம்
15 Jul 2025சிதம்பரம், சிதம்பரம் தொகுதியின் சீர்திருத்த பிள்ளையாக திருமாவளவன் திகழ்வதாக முதல்வர் புகழாரம் தெரிவித்துள்ளார்.
-
வீடு தேடி வரும் சேவைக்கு முதல் நாளே மக்கள் பாராட்டு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
15 Jul 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், சென்னையில் இன்று மட்டும் 109 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அறிவிப்பு
15 Jul 2025சென்னை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய அணியின் போராட்டத்துக்கு சச்சின் பாராட்டு
15 Jul 2025லண்டன் : லார்ட்ஸ் டெஸ்ட்: இறுதிவரை போராடிய இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுற்றுப்பயணம்...
-
காமராஜரின் உயரிய சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கும்: பிரதமர்
15 Jul 2025புதுடெல்லி, காமராஜருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
அரியலூரில் சுற்றுப்பயணம்: எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு
15 Jul 2025அரியலூர், பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும், கூட்டணிக் க
-
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிக்கும் 'தலைவன் தலைவி'
16 Jul 2025சத்யஜோதி பிலிம்ஸ் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்திருக்கும்