எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
நம்பிக்கையுடன்...
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் விளையாட கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்றிரவு லண்டன் செல்கிறது. தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். விராட் கோலி பேசுகையில், “சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதை எங்களது எதிர்பார்ப்பு. நம்பிக்கையுடன் உலகக் கோப்பை தொடரில் விளையாட செல்கிறோம். இந்த ஐபிஎல் தொடரில் எங்களது வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினர்.
இரண்டு தூண்களாக...
நெருக்கடிகளை சமாளிப்பதே உலகக் கோப்பை தொடரில் முக்கியமானதாக இருக்கும். எங்களது பந்துவீச்சாளர்கள் அனைவரும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறார்கள். யாரும் சோர்வுடன் காணப்படவில்லை. குல்தீப், சாஹல் இருவரும் பவுலிங்கின் இரண்டு தூண்களாக இருப்பார்கள். அதிக ரன்களை குவிக்கும் போட்டிகளாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். கோடை காலம் என்பதால் இங்கிலாந்தின் கிளைமேட் அருமையாக இருக்கும். நான் பங்கேற்ற மூன்று உலகக் கோப்பைகளில் இந்தத் தொடர் மிகவும் சவாலானதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


