முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100-வது டி20 போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் ரோகித் சர்மா

புதன்கிழமை, 6 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி : வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் விளையாடுவதன் மூலம், 100-வது போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுகிறார் ரோகித் சர்மா.

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோகித் சர்மா. வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால் அவர் அணியை வழி நடத்தி செல்கிறார். இன்றைய போட்டி ரோகித் சர்மாவுக்கு 100-வது 20 ஓவர் ஆட்டமாகும். 100-வது போட்டியில் விளையாட இருக்கும் முதல் இந்திய வீரர் ஆவார். சர்வதேச அளவில் 2-வது வீரர் என்ற பெருமையை பெறுகிறார். பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் ஒருவர் மட்டுமே 100 இருபது ஓவர் ஆட்டத்தில் விளையாடி இருக்கிறார்.  சோயிப் மாலிக் 111 ஆட்டத்தில் விளையாடி 2263 ரன் எடுத்துள்ளார். ரோகித் சர்மா 99 போட்டியில் 2452 ரன் எடுத்துள்ளார். அப்ரிடி 99 ஆட்டத்திலும், டோனி 98 ஆட்டத்திலும் விளையாடி உள்ளனர். விராட் கோலி 93 போட்டியில் ஆடியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து