முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2019      சினிமா
Image Unavailable

சென்னை : காணாமல் போனதாக கூறப்பட்ட திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா, சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து மீட்கப்பட்டார்.

சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்கங்கள் வெளியானது. இதன் பின்னணியில் சுசித்ரா இருப்பதாக அப்போது பேசப்பட்டது. ஆனால் அதனை சுசித்ரா மறுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து சுசித்ராவின் கணவரான யாரடி நீ மோகினி பட நாயகன் கார்த்திக் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். இதையடுத்து அடையாறில் உள்ள வீட்டில் சுசித்ரா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சுசித்ராவை காணவில்லை என்று அவரது சகோதரியான சுனிதா ராமதுரை என்பவர் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து புகாரை பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்த  போலீசார் செல்போன் எண்ணை வைத்து சுசித்ராவை தேடி வந்தனர். அவரது செல்போன் எண்ணின் இருப்பிடம் தியாகராயநகரில் உள்ள விடுதியை காட்டியது. அந்த இடத்திற்கு சென்ற போலீசார் சுசித்ராவை மீட்டனர். அப்போது தனது சகோதரியை பார்த்து சுசித்ரா பலமாக சத்தமிட்டதாக கூறப்படுகிறது. தனது குடும்பம் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் வெளியுலகிற்கு காட்ட முயற்சிப்பதாகவும், தன்னை ஏதாவது செய்து விடுவார்கள் என்று சுசித்ரா போலீசிடம் அச்சம் தெரிவித்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து அவரை மீட்ட போலீசார், அவரது விருப்பப்படி கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் சுசித்ராவை அனுமதித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து