முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி. யில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் இளம்பெண்

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

இந்தூர் : மத்திய பிரதேசத்தில் எம்.பி.ஏ. படிக்கும் ஒரு மாணவி தனது அழகான நடனம் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் சுபி ஜெயின் (23). இவர் புனேவில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். இதற்கிடையில் தனது பட்டப்படிப்பின் ஒரு அங்கமான இன்டர்ன்ஷிப் எனப்படும் பகுதி நேர நிகழ்ச்சியில் 15 நாட்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வலராக செயல்பட விரும்பினார்.  இதையடுத்து இந்தூர் பகுதி போலீஸ் கூடுதல் ஆணையரை அணுகிய சுபி தனது விருப்பத்தை வேண்டுகோளாக கூறினார். மாணவியின் வேண்டுகோளை ஏற்ற ஆணையர் சுபி ஜெயினுக்கு டிராபிக் போலீஸ் உடை வழங்கி 15 நாட்கள் இந்தூர் சாலையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அனுமதி அளித்தார். இதையடுத்து, டிராபிக் போலிஸ் உடையில் மாணவி சுபி சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிதல், சீட் பெல்ட்கள் அணிதல் போன்ற போக்குவரத்து விதிகளின் முக்கியத்துவதை தனது அழகு நடனம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும், சாலை விதிகளை பின்பற்றும் வாகன ஓட்டிகளுக்கு அவர் தனது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தனது இந்த முயற்சிக்கு இந்தூர் வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக சுபி ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து