முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: தூங்கிக் கொண்டிருந்த 43 பேர் உடல் கருகி பலி - ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லி தொழிற்சாலையில் நேற்று நடந்த பயங்கர தீ விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த 43 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த தீ விபத்து சம்பவத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மத்திய டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டி என்ற பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அனஜ் மண்டி பகுதியில் உள்ள  தொழிற்சாலையில் அதிகாலை 5.22 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் முதலில் 35 பேர் உயிரிழந்தனர். தீயை அணைக்கும் பணியில் 30-க்கும் மேற்பட்ட  தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள்  தீவிரமாக ஈடுபட்டனர். மருத்துவமனையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 43 உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

தொழிற்சாலைக்குள் பை தயாரிக்கும் இயந்திரம் இருந்த பகுதியில் இருந்தே தீ பரவத் தொடங்கியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட போது 50 பேர் தொழிற்சாலையில் இருந்துள்ளனர். அதிகாலை 5 மணி என்பதால் அனைவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அதனால், மூச்சுத் திணறலில் பலரும் இறந்துள்ளனர். உயிருடன் மீட்கப்பட்டவர்கள் அனைவரும் டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மற்றும் இந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், டெல்லி தீ விபத்து செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீ விபத்து பகுதியில் மீட்புப் பணியில் அனைத்து தேவையான உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில், டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டுகிறேன். தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50,000  வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தீ விபத்து ஏற்பட்ட பகுதியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று காலை பார்வையிட்டு விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை  நேரில் சென்று நலம் விசாரித்த கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். தீக்காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள்  குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்ட பகுதியை டெல்லி வடகிழக்கு பாஜக எம்.பி., மனோஜ் திவாரி பார்வையிட்டு இது ஒரு சோகமான சம்பவம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, பா.ஜ.க. சார்பில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5  லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.25000 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், அனுமதியின்றி வீட்டில் தொழிற்சாலை நடத்தி 43 உயிரிழப்புகளுக்கு காரணமான கட்டிட உரிமையாளர் ரேஹான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து