முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

குடியுரிமை சட்டத்தை எதிர்த்துக் கிளம்பியுள்ள போராட்ட வன்முறைகளில் நேற்று மூன்று மருத்துவமனைகளில் மேலும் ஏழு உயிரிழப்புகள் பதிவான நிலையில் பலி எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து டெல்லி சுகாதார துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வடகிழக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வன்முறை வெடித்ததில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். புதன்கிழமை இரவு வரை, தில்ஷாத் கார்டனில் உள்ள ஜி.டி.பி. மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக இருந்தது. தற்போது ஜி.டி.பி. மருத்துவமனையில் மேலும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன, இதில் புதன்கிழமை எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் சிகிச்சையின் போது ஒருவர் உயிரிழந்தார். வியாழக்கிழமை மேலும் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் ஒரு இறப்பு பதிவாகியுள்ளது, மொத்த இறப்பு எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு டெல்லி சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து