எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக அரசு அறிவித்தபடி நேற்று மாலை 6 மணியளவில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. மேலும் மாவட்ட எல்லைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
அதிரடி நடவடிக்கைகள்
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முதல் கட்டமாக அனைத்து பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது பிளஸ் 1 தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
144 தடை அமல்
இதனிடையே தமிழகத்தில் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் மாவட்ட எல்லைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. டீக்கடைகள் திறந்திருக்கும் என்று அறிவித்த அரசு, அதே நேரம் டீக்கடைகளில் கூட்டம் கூடக் கூடாது என்றும் அறிவித்தது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் பார்சல் வாங்கி செல்ல தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதே நேரம் பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது என்றும் அரசு அறிவித்தது.
வந்தது விழிப்புணர்வு
இந்த நிலையில் நேற்று மாலை அரசு அறிவித்தபடி 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. அதையடுத்து அனைத்து மாவட்ட எல்லைகளும் சீல் வைக்கப்பட்டன. கடந்த ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட போது கூட மக்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள். ஆனால் 144 தடை உத்தரவு என்று அரசு அறிவித்ததும் மக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பும் அச்சமும் தொற்றிக் கொண்டது. அந்த அச்சத்தின் விளைவாக மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவித்தனர். அரிசிக் கடைகளிலும் சரி, காய்கறி கடைகளிலும் சரி கூட்டம் அலைமோதியது. தங்களால் எவ்வளவு வாங்க முடியுமோ அவ்வளவு பொருட்களையும் மக்கள் வாங்கி சென்றனர். 6 மணிக்கு 144 தடை அமல் என்பதை உணர்ந்து அதற்கு முன்பே தங்கள் வீடுகளை நோக்கி மக்கள் பறந்தனர். ஊரடங்கு உத்தரவின்போது கூட மக்கள் மாஸ்க் அணிந்ததை அவ்வளவாக காண முடியவில்லை. ஆனால் நேற்று பஸ்களிலும், சாலைகளிலும் சென்ற மக்கள் மாஸ்க் அணிந்து சென்றதை காண முடிந்தது. கொரோனாவின் தீவிரத்தை மக்கள் புரிந்து கொண்டதையே இது காட்டுகிறது. ஊரடங்கு உத்தரவிற்கும், 144 தடை உத்தரவுக்கும் வித்தியாசம் உள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்கள் வெளியே வரக்கூடாது. ஆனால் 144 தடை உத்தரவின் போது 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடக் கூடாது என்பதுதான் விதி. இதை பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும். போலீசாரும் புரிந்து கொண்டு பொதுமக்களிடத்தில் நல்ல முறையில் அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டுமே தவிர அடக்குமுறையை கையாளக் கூடாது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி எப்பொழுதுமே கிடையாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளதாக அமைச்சர் தகவல்
11 Jan 2026சென்னை, காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்ப
-
ஈரோட்டில் உள்ள சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை' என பெயர் சூட்டினார் முதல்வர்
11 Jan 2026சென்னை, ஈரோட்டில் உள்ள சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை' என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
-
யாரிடமும் பேதம் காட்டாமல், யாரையும் பிரித்து பார்க்காத ஒரே மொழி 'தமிழ்' மொழி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
11 Jan 2026சென்னை, தமிழ்மொழி என்பது நம் அனைவரையும் இணைக்க கூடிய ஒரு மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப்பார்க்காது.
-
கிரோக் ஏ.ஐ. தள விவகாரம்: இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக எக்ஸ் நிறுவனம் உறுதி
11 Jan 2026புதுடெல்லி, எலான் மஸ்க்குக்கு சொந்தமான சமூக ஊடகமாக எக்ஸ் தளத்தின் ஏஐ சாட்போட் ஆன கிரோக் தளம் தொடர்பான புகாரில் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதி அளித்துள்ள
-
கடலூர், அரியலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 Jan 2026சென்னை, தமிழகத்தில் கடலூர், அரியலூர் உள்ளிட்ட இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களால் இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Jan 2026சென்னை, இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் ம
-
17 வணிக செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: 12 மணி நேர கவுண்ட்டவுன் தொடக்கம்
11 Jan 2026சென்னை, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பால் பரபரப்பு
11 Jan 2026தெக்ரான், ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் மக்களின் போராட்டங்கள் 2-வது வாரத்தை எட்டி உள்ளது.
-
மெரினா கடற்கரையில் குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
11 Jan 2026சென்னை, மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
-
குஜராத், சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் : சவுரியா யாத்திரையிலும் பங்கேற்பு
11 Jan 2026அகமதாபாத், சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி, காலை 9.45 மணியளவில் பூஜைகள் செய்து, சாமி தரிசனம் மேற்கொண்டார்.
-
லல்லு பிரசாத்துக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்: மகன் தேஜ் பிரதாப் கோரிக்கை
11 Jan 2026பாட்னா, பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –12-01-2026
12 Jan 2026 -
45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
12 Jan 2026சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
-
போராட்டத்தின் போது கைதான ஆசிரியர்களை உடனே விடுவிக்க அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Jan 2026சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


