எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : புயல், மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக மாறி பின்பு வலுவிழந்தாலும் அதன் தாக்கம் பலத்த மழையாக கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்தது. இதில் 3 லட்சம் ஏக்கரில் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இந்த தொடர் மழை காரணமாக சம்பா பயிர்களில் கரு சிதைவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் 21 ஆயிரத்து 758 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதேபோல் கடலை, சோளம், பருத்தி பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பயிரிடப்பட்ட கரும்புகள் 25 ஏக்கரில் சாய்ந்து கிடக்கிறது. அதே போல் 75 ஏக்கரில் நிலக்கடலையும், 75 ஏக்கரில் சோளப்பயிர்களும் வயலில் சாய்ந்து பாதிப்புக்குள்ளாகி உள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் 25 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கின. திருவாரூரில் உள்ள கூடூர் காற்றாற்றில் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவாரூர் நாலுகால் மண்டபம் பகுதியில் ஒரு சில இடங்களில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. நாகை அருகே ஓடம் போக்கி ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் வயல்களில் தண்ணீர் புகுந்தது. மேலும் 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வயல்கள் குளம் போல் காட்சி அளிக்கிறது. சீர்காழி பகுதியில் தொடர் மழை காரணமாக 700 ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையால் மூழ்கி கிடக்கும் சம்பா, தாளடி, நெற்பயிர்கள், நிலக்கடை, சோளம், கரும்புகள் பயிரிடப்பட்டுள்ள வயல்களை அந்தந்த பகுதியின் வேளாண் அலுவலர்கள் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க வடிகால் வசதிகளை மாவட்ட நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை நீரை எந்திரம் மூலம் வெளியேற்றும் பணியிலும் மாவட்ட நிர்வாகத்தினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் மழைநீர் நிரம்பி செல்கின்றன. ஒரு சில இடங்களில் வாய்க்கால் மற்றும் ஆறுகள் உடைப்பு எடுத்து வயல்வெளிகளை சூழ்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர், புள்ளம்பாடி ஆலம்பாடி, லால்குடி பகுதிகளில் நெற்பயிர்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளது.
இந்நிலையில் நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
அடக்கம், மனிதநேயத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும்: யு.பி.எஸ்.சி. தமிழக வெற்றியாளர்களுக்கு முதல்வர் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
11 Mar 2026சென்னை, உங்கள் பணியில் நாட்டைக் கவனித்தாலும் உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் அதே அக்கறையுடன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று யு.பி.எஸ்.சி.
-
திருச்சி பஞ்சப்பூரில் மத்திய அரசு சார்பில் விழா; ரூ.5,650 கோடியில் புதிய திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
11 Mar 2026திருச்சி, திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற மத்திய அரசின் விழாவில் சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.
-
குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி: 54 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 Mar 2026சென்னை, குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்திலை சேர்ந்த 54 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
தமிழ்நாட்டில் நவீன, வலுவான மின்சார அமைப்பை உருவாக்க அரசு - கலிபோர்னியா பல்கலை., இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
11 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் நவீன, வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மின்சார அமைப்பை உருவாக்க தமிழ்நாடு அரசு-கலிபோர்னியா பல்கலைக்கழகம் இடையே முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
11 Mar 2026சென்னை, தமிழகத்தில் இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை
-
எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு: பார்லி.,யில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
11 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் எல்.பி.ஜி.
-
ரூ.100 கோடியில் மின்சார, மின்னணு இணைப்பிகள் புதிய உற்பத்தி ஆலை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஹிரோசே நிறுவனத்துடன் ஒப்பந்தம்
11 Mar 2026சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் ரூ.100 கோடியில், 100 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமையவுள்ள மின்சார / மின்னணு இணைப்பிகள் உற்பத்தி
-
போர் சூழல் காரணமாக மேற்காசியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Mar 2026சென்னை, மேற்காசியாவில் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதற்கான சிறப்பு விமானங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என
-
கோடைக்காலத்தில் எரிவாயு தேவை கூடும் என்பதால் மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தை உயர்த்த வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Mar 2026சென்னை, மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தைக் கடந்த 6 மாதங்களில் அவர்கள் பயன்படுத்திய அளவில் 65 சதவீதம் என நிர்ணயித்திருப்பதை மறுபரிசீலிக்க கோரி மத்திய பெட்ரோலியத்
-
காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை
11 Mar 2026காரைக்குடி, காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விசாரணை நடத்தி வருக
-
ஹார்மூஸ் ஜலசந்தி அருகே ஈரானின் 16 கண்ணிவெடி படகுகளை தாக்கி அழித்தது அமெரிக்கா
11 Mar 2026வாஷிங்டன், ஹார்மூஸ் ஜலசந்தி அருகே ஈரானின் 16 கண்ணிவெடி படகுகளை அமெரிக்க படை அழித்தது.
-
அரசுப்பள்ளியில் உணவு சாப்பிட்டு மயக்கமடைந்த பள்ளி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
11 Mar 2026கோவை, கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவ - மாணவியருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட மாணவர்களுக்கு உரிய
-
நவோதயா பள்ளிகளை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்
11 Mar 2026புதுடெல்லி, தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
-
தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக ஆர்.வி.ஆர்லேகா் இன்று பதவியேற்பு
11 Mar 2026சென்னை, தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.வி.ஆர்லேகா் இன்று பதவியேற்கவுள்ளார்.
-
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது
11 Mar 2026தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும் 2025–2026 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை (மார்
-
சட்டமன்ற தேர்தல் முடியும் வரை நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க கோரி நீதிமன்றம் செல்கிறார் விஜய்
11 Mar 2026சென்னை, தேர்தல் முடியும் வரை டெல்லியில் சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.


