எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூர் : கர்நாடகத்தில் அடுத்த 2 ஆண்டுகளுக்கும் நான் தான் முதல்வராக இருப்பேன் என்றும் எடியூரப்பா கூறினார்.
ஹாசன் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் எடியூரப்பா ஹாசனுக்கு வந்தார். பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஹாசனுக்கு வந்த அவர் அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மாநிலத்தில் ஹாசன் உள்பட 11 மாவட்டங்களில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. கொரோனாவால் மக்கள் உயிரிழப்பதற்கு அரசு தான் காரணம் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி ரேவண்ணா கூறி வருவது கண்டிக்கத்தக்கது.
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் அரசு பொய்யான தகவல்களை தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் குற்றம்சாட்டுகின்றன. கொரோனா தடுப்பு பணியில் பொய் சொல்வதால் அரசுக்கு என்ன லாபம்?.
அடுத்த 2 ஆண்டுகளும் நான் தான் முதல்வராக இருப்பேன். நான் தான் முதல்வராக இருந்து மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவேன். பா.ஜனதா மேலிட தலைவர்களும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளும் என் மீதுநம்பிக்கை வைத்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தை அனைத்து ரீதியிலும் வளர்ச்சி அடைய வைப்பேன். மாநிலத்தை நல்லபடியாக வழிநடத்துவேன். நல்ல முறையில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


