எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புது டெல்லி: கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்க மத்திய அரசுக்குத் திட்டம் ஏதும் இல்லை என்றும், நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தமிழக எம்.பி.க்களின் கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
மக்களவையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் பின்வரும் கேள்விகளை எழுப்பியிருந்தனர். கொரோனா பெருந்தொற்று மற்றும் அதன் மூன்றாவது அலை குறித்த அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் அதுபோன்ற நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தருக. இல்லை என்றால் அதன் காரணங்களைத் தருக. ஒருவேளை பள்ளி, கல்லூரிகளில் தேர்வை நடத்துவது என அரசு தீர்மானித்தால் அடுத்து வரும் மாதங்களில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் உயிர்ப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக அரசு உருவாக்கி இருக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? மருத்துவப் படிப்புக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வைப் போல கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களை தருக. ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
அதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் அளித்துள்ள எழுத்துபூர்வமான பதிலில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:- நீட் தேர்வு ரத்து செய்யப்படாது. 2021-ம் ஆண்டுக்கான நீட் இளங்கலை, முதுகலைத் தேர்வுகள் முறையே செப்டம்பர் 11, 2021 மற்றும் செப்டம்பர் 12, 2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கெனப் பின்வரும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன. தேர்வு எழுதுவோர் கூட்டம் கூடுவதையும், தொலைதூரப் பயணத்தையும் தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோருக்கு வழங்கப்படும் அட்மிஷன் கார்டுகள் அவர்கள் சுலபமாகப் பயணிப்பதற்கான இ-பாஸைக் கொண்டிருக்கும். தேர்வு மையங்களுக்குள் நுழைவது, வெளியேறுவது ஆகியவை நெரிசல் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும். அனைத்து மாணவர்களுக்கும் வெப்பநிலை சோதிக்கப்படும். இயல்பு வெப்பநிலையை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். முகக் கவசம் அணிவது கட்டாயம். மேலும் முகக் கவசம், ஷீல்டு மற்றும் சானிடைசர் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு கிட் வழங்கப்படும். தேர்வு மையத்திற்கு வெளியே கூட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கலை மற்றும் அறிவியலுக்கான தேர்வுகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் அல்லது மாநில அரசுகளே நடத்துகின்றன. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
20 Dec 2025சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை
-
கீழடி, நம் தாய்மடி - பொருநை, தமிழரின் பெருமை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
20 Dec 2025சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.வுக்கு வாய்ப்பு ஒன்றை தாருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
20 Dec 2025கொல்கத்தா, பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
-
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
20 Dec 2025சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்
20 Dec 2025சென்னை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இஷான், ரிங்கு சிங், சஞ்சு சாம்சன்
20 Dec 2025மும்பை, 10-வது டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இஷான், ரிங்கு சிங், சாம்சனுக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் சுப்மன் கில்லுக்கு அணியில் இடம் பெறவில்லை.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-12-2025.
21 Dec 2025 -
செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
21 Dec 2025சென்னை, செவிலியர்களின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
நீலகிரி மாவட்டத்தில் இன்று உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னனை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று உறைபனி ஏற
-
பூமியின் சுழற்சியிலிருந்து மின்சாரம் தயாரித்த அமெரிக்க விஞ்ஞானிகள்..!
21 Dec 2025நியூயார்க், பூமியின் சுழற்சி, காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
-
உலகின் முதல் பெரும் பணக்காரர்: 700 பி. டாலர் மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடம்
21 Dec 2025நியூயார்க், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலரைத் தாண்டியது.
-
உக்ரைன் போர் முடிவுக்கு வருமா...? அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை
21 Dec 2025வாஷிங்டன், உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 396வது நாளாக போர் நீடித்த நிலையில், போரை நிறுத்த அமெரிக்கா - ரஷ்யா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
அரியானாவில் நிலநடுக்கம்
21 Dec 2025சண்டிகர், அரியானாவில் உள்ள ரோஹ்தக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கிழக்கு சீன கடல் பகுதியில் உலகின் மிகப்பெரிய தங்கப்படிமம் கண்டுபிடிப்பு
21 Dec 2025பெய்ஜிங், கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
-
வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை: அரசியல் தலைவர் வீட்டுக்கு தீவைப்பு
21 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் அவரது 7 வயது மகள் உயிரிழந்து உள்ளார்.
-
17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு
21 Dec 2025லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
-
தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி
21 Dec 2025கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்தனர்.
-
தி.மு.க. கூட்டணியில் தொடர காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்
21 Dec 2025மதுரை, பதவி ஆசை இல்லாததே தி.மு.க. கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.
-
நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர்: த.வெ.க. நிர்வாகி அருண் ராஜ் பேட்டி
21 Dec 2025கோவை, விஜய் இப்போது நடிகர் அல்ல என்றும் நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் த.வெ.க.



