எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
							
						Source: provided
சென்னை : தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று அரசியல் கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே மனுதாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. மாவட்டங்கள் மறுசீரமைப்பு காரணமாக அப்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டார். இந்த 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தலும், மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்டு மறைமுக தேர்தலும் நடத்தப்படுகிறது. மொத்தம் 27,003 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்யும் பொது வேட்பாளர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.200, ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1000 வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த வேட்பாளர்கள் வைப்புத்தொகையாக இதில் 50 சதவீதம் செலுத்தினால் போதுமானது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான வேட்பு மனுக்களை வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுக்களை அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான நேற்று அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவில்லை. சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே மனுதாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 22-ம் தேதி ஆகும். 23-ம் தேதி வேட்பு மனு ஆய்வு நடைபெறுகிறது. 25-ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெறலாம். முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 9-ம் தேதியும் நடக்கிறது. 12-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நடவடிக்கைகள் 16-ம் தேதி முடிவடைகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 20-ம் தேதி பதவி ஏற்கிறார்கள். 22-ம் தேதி மறைமுக தேர்தலுக்கான கூட்ட நாள் ஆகும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள சென்னை புறநகர் பகுதிகளிலும் தேர்தல் நடை பெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களில் தேர்தல் நடக்கிறது. இதில் அய்யப்பன் தாங்கல், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், கோவூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
செங்கப்பட்டு மாவட்டத்தில் பரங்கிமலை, திருக்கழுகுன்றம், திருப்போரூர், லத்தூர், காட்டாங்கொளத்தூர், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் நடக்கிறது. பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திரிசூலம், முடிச்சூர், வேங்கை வாசல், பொழிச்சலூர், கவுல் பஜார், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. இந்த பகுதிகளில் முதல்நாளான நேற்று சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள 19 யூனியன் அலுவலகங்களிலும் தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளிடம் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்களில் நியமிக்கப்பட்ட அலுவலர்களிடம் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு மனுதாக்கல் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் 214 இடங்களிலும், தென்காசி மாவட்டத்தில் 232 இடங்களிலும் நேற்று மனுத்தாக்கல் நடந்தது. நேற்று வேட்பு மனு தாக்கலின் முதல் நாள் என்பதால், விறுவிறுப்பு காணப்படவில்லை. சில சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்தனர். இதேபோல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிராமங்களில் பதவிகளை கைப்பற்ற அதிக போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக கிராம பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் நேற்று யூனியன் அலுவலகத்துக்கு வந்து வேட்புமனுக்களை வாங்கி சென்றனர். இதன்காரணமாக அனைத்து யூனியன் அலுவலகங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 1 month ago | 
-   
          இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-10-2025.27 Oct 2025
-   
          கரூர் நெரிசல் சம்பவ வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு27 Oct 2025சென்னை, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 3 வாரத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
-   
          தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கவே வாய்ப்பு : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி27 Oct 2025சிவகங்கை : தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைக்க வாய்ப்புள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். 
-   
          பைசன் படத்தை பாராட்டிய தமிழக முதல்வர்27 Oct 2025தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. 
-   
          நாட்டின் ஒற்றுமைக்காக - தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வும்-காங்கிரசும் இன்று ஒரே அணியில் பயணிக்கிறது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு27 Oct 2025சென்னை, தி.மு.க.வும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற 
-   
          ராஜ் B. ஷெட்டி நடிக்கும் ஜுகாரி கிராஸ்27 Oct 2025பிரபல இயக்குநர் குருதத்த கனிகா, ராஜ் B. ஷெட்டியுடன் இணைந்து, ஒரு புதிய படத்தை சமீபத்தில் துவங்கியுள்ளார். 
-   
          தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு27 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டி முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
-   
          ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு27 Oct 2025மாதவன் நடிப்பில் உருவாகி வரும் ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. 
-   
          தங்கம் விலை சரிவு27 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. 
-   
          'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?27 Oct 2025சென்னை, மோந்தா புயலுக்கு அடுத்து வரும் புயலின் பெயர் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
-   
          இந்தவாரம் வெளியாகும் ஆர்யன்27 Oct 2025விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்கும் படம் ஆர 
-   
          மீண்டும் பிரமாண்ட படத்தில் நடிக்கும் பிரபாஸ்27 Oct 2025மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் வழங்கும் பான் இந்தியா படம் ஃபௌசி. 
-   
          தடை அதை உடை படத்தின் இசை வெளியீட்டு விழா27 Oct 2025காந்திமதி பிக்சர்ஸ் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்கி ’அங்காடித்தெரு’ மகேஷ் மற்றும் குணா பாபு நடிக்கும் படம் தடை அதை உடை. 
-   
          டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள்: சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் யோசனை27 Oct 2025சென்னை, டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. 
-   
          துணை ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை27 Oct 2025திருப்பூர் : துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகம் வருகிறார். 
-   
          குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்கள் குடும்பத்தினரிடம் விஜய் உறுதி27 Oct 2025சென்னை : குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்று கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்களின் குடும்பத்தினரிடம் த.வெ.க. தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார். 
-   
          சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் நிவாரண மையங்கள்: தமிழ்நாடு அரசு27 Oct 2025சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் மழை வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
-   
          ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை கடக்கும் மோந்தா புயல்27 Oct 2025சென்னை : ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை மோந்தா புயல் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
-   
          சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க சூர்யகாந்த் பெயர் பரிந்துரை27 Oct 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்தை நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். 
-   
          கரூர் சம்பவம்: ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்27 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சர்வையானதையடுத்து அவரது மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
-   
          மோந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி பேச்சு27 Oct 2025அமராவதி, மோந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 
-   
          கரூர் சம்பவத்தில் முன்ஜாமீன் மனுவை புஸ்ஸி ஆனந்த் வாபஸ் பெற்றதால் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்27 Oct 2025சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி த.வெ.க. 
-   
          உலகத்தின் நுழைவாயிலாக ‘இந்தியா கேட்’ மாறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு27 Oct 2025மும்பை : நிகோபார் தீவு மேம்பாட்டுத் திட்டம் நமது கடல்சார் வர்த்த கத்தை பலமடங்கு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்தியா கேட்’ விரைவில 
-   
          தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்27 Oct 2025சென்னை : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துபாய் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 
-   
          2-ம் கட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வரும் நவ. 4-ல் தொடக்கம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு27 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் நவம்பர் 4-ம் தேதி மேற்க 
























































