முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா, குட்கா விற்பனை செய்யும் குற்றவாளிகளை ஒரே மாதத்தில் கைது செய்ய வேண்டும்: டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனையை ஒரு மாதத்தில் ஒழிக்க அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு, காவல்துறை இயக்குநர் உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது., பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க, 6.12.2021 முதல் 6.1.2022 வரை ஒரு மாத காலம் கஞ்சா மற்றும் லாட்டரி வேட்டை நடத்த வேண்டும். அதன்படி, கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை செய்பவர்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

கஞ்சா மற்றும் குட்கா கடத்தல் - பதுக்கல் - விற்பனை சங்கிலியை உடைக்க மொத்த கொள்முதல், விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கஞ்சா, குட்கா, லாட்டரி பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களை அடையாளம் கண்டு மனநல ஆலோசகர் மூலம் மீட்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களை கொண்டு காவல் ஆய்வாளர் வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்கி ரகசிய தகவல் சேகரித்து விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். ஆந்திரா மாநிலத்தில் பயிரிடப்படும் கஞ்சா பயிரை ஒழிக்க ஆந்திரா போலீசாருடன் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை மாநில போதைத் தடுப்பு பிரிவு முன்னின்று செயல்படுத்த வேண்டும்.

ரயில்வே காவல்துறையினர் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா, லாட்டரியை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இந்த ஒரு மாதத்துடன் இந்த நடவடிக்கை நின்று விடாமல் காவல் நிலைய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர்களுக்கு கஞ்சா, குட்கா, லாட்டரி குற்றவாளிகளை கண்காணிக்கும் பொறுப்பு அளித்து தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பணியினை சென்னை காவல் ஆணையர்,  சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் இயக்குநர் ஆகியோர் தினமும் கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து