எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிசம்பர் முதல் வாரத்தில், பிசிசிஐ அவரை ஒருநாள் தொடருக்கான அணியின் கேப்டன்சியில் இருந்தும் நீக்கியது. என்றாலும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு டெஸ்ட் கேப்டனாக நீடிப்பார் என்று பலர் எதிர்பார்த்தபோது சில தினங்கள் முன் அதிலிருந்தும் விலகினார். விராட் கோலி இந்த முடிவு எடுப்பதற்கு முன் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என்கிறார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதுல் வாசன்.
இது தொடர்பாக அதுல் வாசன் கூறுகையில், "ஆஸ்திரேலியத் தொடருக்கு இடையே, டோனி ஓய்வு முடிவை அறிவித்தபோது எனக்கு அது அதிர்ச்சியை உண்டாக்கியது. ஆனால், விராட் கோலியின் முடிவு எனக்கு எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. காரணம், டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சந்தித்த தோல்விக்குப் பிறகு கடந்த சில மாதங்களாக கோலி மீது அழுத்தம் இருந்தது என்று நினைக்கிறேன். அவர் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை. அணியின் தோல்விக்கு அவர் மற்ற வீரர்களைச் சுட்டிக்காட்டினார். இந்தப் போக்கு இதற்கு முன்பு அவரிடம் கிடையாது என்றார்.
ரோகித் - அஸ்வினுக்கு வெங்சர்க்கார் ஆதரவு
இந்திய கிரிக்கெட்டுக்கு 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி முதலில் 20 ஓவரில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரிஷப்பண்ட் ஆகியோரில் ஒருவர் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா அல்லது அஸ்வினை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது., டிராவிட் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது இருந்த நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. அப்போது நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தேன். எல்லோரும் டோனிக்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தனர். குறுகிய காலத்துக்காக நாங்கள் கும்ப்ளேவை தேர்வு செய்தோம். அவரும் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டார். அதே மாதிரி தற்போது ரோகித் சர்மா அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒரு வரை டெஸ்ட் கேப்டனாக நியமிக்கலாம். இவ்வாறு திலீப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு எதிரொலி: ஆஸி.-நியூசி. தொடர் ஒத்திவைப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்துடன் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டி கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் நடைபெறும் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டு உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி வருகிற 24-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது.
முதல் போட்டி 30-ம் தேதி பெர்த்திலும், 2-வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 2-ந் தேதி ஹோபர்ட்டிலும், கடைசி ஒருநாள் போட்டி 5-ந் தேதி சிட்னியிலும், 20 ஓவர் ஆட்டம் பிப்ரவரி 8-ந் தேதி கான்பராவிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் விவாதித்து, முடிவெடுத்து இந்த தகவலை நேற்று தெரிவித்தன. இந்த போட்டி தொடர் எப்போது நடைபெறும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்டேஜ் லேண்ட் ரோவர் காரை வாங்கியுள்ள மகேந்திர சிங் டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு கிரிக்கெட் விளையாட்டை தாண்டி மிகவும் பிடித்த விஷயம் என்றால் அது வாகனங்கள்தான். அவரது ராஞ்சி பண்ணை வீட்டில் அமைந்துள்ள கராஜில் பழங்கால விண்டேஜ் கார்கள் தொடங்கி பிராண்ட் நியூ கார்கள், பைக்குகள் என ரகம் ரகமாக வாகனங்கள் அலங்கரித்து நிற்கின்றன.
அதில் புது வரவாக இணைக்கிறது விண்டேஜ் லேண்ட் ரோவர் 3 ஸ்டேஷன் வேகன் கார். இந்த கார் கடந்த 1971-இல் உருவாக்கப்பட்டது. இதனை ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஏலத்தில் டோனி வாங்கியுள்ளார். 1971 முதல் 1985 வரையிலான காலகட்டத்தில் வெளியான லேண்ட் ரோவர் கார்களில் இந்த 3 ஸ்டேஷன் வேகன் கார் மிகவும் பிரபலம் என சொல்லப்பட்டுள்ளது. ஹம்மர் எச்2, ஜிஎம்சி சியரா பிக்-அப் டிரக், போர்ஸ் பாக்ஸர், ஃபெராரி 500 ஜிடிஓ, ஆடி க்யூ7, மஹிந்திரா ஸ்கார்பியோ, ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ், கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் மற்றும் நிசான் ஜோங்கா கார்களை டோனி தற்போது வைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்த டோனி
கடந்த 2019-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மொத்தம் 193 ரன்கள் எடுத்திருந்தார் டோனி. அதனால் அந்த தொடரில் தொடர் நாயகன் விருதையும் வென்றார். அப்போது டோனியின் வயது 37 வயது 195 நாட்கள். அதன் மூலம் ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற மூத்த வயது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
சிட்னியில் 51 ரன்கள், அடிலெய்டில் 55* ரன்கள் மற்றும் மெல்பேர்னில் 87* ரன்கள் எடுத்தார் டோனி. அதன் மூலம் இந்தியா தொடரையும் 2 - 1 என்ற கணக்கில் வென்றது. டோனி அவுட்டான முதல் போட்டியில் மட்டுமே இந்தியா தோல்வியை தழுவியது. அந்த தொடருக்கு பின்னர் டோனி 13 ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் விளையாடி இருந்தார். அதில் நான்கு போட்டிகளில் நாட் அவுட். நியூசிலாந்து அணிக்கு எதிரான 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதியில் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதுவே சர்வதேச கிரிக்கெட்டில் அவரது கடைசி போட்டியாக அமைந்தது.
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த அஸ்வின் !
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியுள்ளது தென்னாப்பிரிக்க அணி. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று முதல் தொடங்கியது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும் துணை கேப்டனாக பும்ராவும் செயல்படுகிறார்கள்.
பார்ல் பகுதியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி முதல்முறையாக டாஸில் தோற்றுள்ளது. இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் அறிமுகமாகியுள்ளார். 4-ம் நிலை வீரராக ஷ்ரேயஸ் ஐயர் விளையாடுவார் என கேப்டன் ராகுல் தெரிவித்தார். இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
காவலாளி அஜித் குமார் மரணம்: நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
01 Jul 2025மதுரை : திருப்புவனம் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் கந்தர்லால் சுரேஷ் தலைமையில், நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்
-
மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு
01 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவிக்கு வரும் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவி
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
01 Jul 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 1) பவுனுக்கு ரூ.840 என அதிரடி ஏற்றம் கண்டு விற்பனையானது.
-
வீடு, வீடாக சென்று பிரசாரம் ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
01 Jul 2025சென்னை, டிரெண்ட் மாறியதால் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரம் மூலம் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.
-
ராமநாதபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
01 Jul 2025புதுடில்லி : மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 87-ஐ ராமநாதபுரம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
தமிழகத்தில் பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்வு : அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
01 Jul 2025சென்னை : பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல், மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர்&n
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.58 குறைப்பு
01 Jul 2025புதுடில்லி : வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைக்கப்பட்டுள்ளது.
-
சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு விசாரணை : ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்
01 Jul 2025சென்னை : அஜித்குமார் 'கஸ்டடி' மரணம் தொடர்பான வழக்கை, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நில
-
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை: இ.பி.எஸ்.
01 Jul 2025சென்னை, “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என அ.தி.மு.க.
-
த.வெ.க. கொடி பயன்படுத்த தடை விதிக்க கோரி வழக்கு: ஜூலை 3-ம் தேதி தீர்ப்பு
01 Jul 2025சென்னை : த.வெ.க.
-
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்காக வெற்றி நிச்சயம் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார் : ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு
01 Jul 2025சென்னை : சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் உலகத்தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்
-
10-வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; அதிகாரமளித்தலின் புதிய சகாப்தம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
01 Jul 2025புதுடில்லி : டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், அதிகாரமளித்தலின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்த ஒரு பயணத்திற்கு நாம் சாட்சியாக நி
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது
01 Jul 2025இராமேசுவரம் : தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சீதை பிறந்த இடத்தின் வளர்ச்சிக்கு ரூ.883 கோடி: பீகார் அமைச்சரவை ஒப்புதல்
01 Jul 2025பாட்னா : பீகார் மாநிலத்தில், சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும், சீதாமார்ஹி மாவட்டத்திலுள்ள புனித தலங்களின் மேம்பாட்டிற்காக ரூ.882.87 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களு
-
இ.பி.எஸ். வீட்டிற்கு செல்வீர்களா? - முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்
01 Jul 2025சென்னை : இ.பி.எஸ். வீட்டிற்குச் செல்வீர்களா? என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த பதிலளித்துள்ளார்.
-
அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணம் உயர்வு: அரசாணை
01 Jul 2025சென்னை : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் உயர்வு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
நான் முதல்வன் திட்டம்: ஊக்கத்தொகை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
01 Jul 2025சென்னை : யு.பி.எஸ்.சி. மெயின்ஸ் தேர்வுக்கான ரூ. 25 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் தொடங்கி உள்ளது.
-
இளைஞர் மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை: அமைச்சர்
01 Jul 2025புதுக்கோட்டை : திருப்புவனம் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
-
கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்
01 Jul 2025சென்னை : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
காவலாளி அஜித்குமார் வழக்கில் போலீசாரின் உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு
01 Jul 2025திருப்புவனம், போலீஸார் விசாரணையில் கோயில் காவலாளி உயிரிழந்த வழக்கில் 5 காவலர்கள் குடும்பத்தினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
-
கோவில் காவலாளி உயிரிழந்த சம்பவம்: மானாமதுரை டி.எஸ்.பி. பணியிடை நீக்கம்; எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
01 Jul 2025சிவகங்கை : போலீஸ் விசாரணையில் கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மானாமதுரை டி.எஸ்.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
தெலங்கானா ரசாயன ஆலை விபத்து உயிரிழப்பு 44 ஆனது : ரூ.1 கோடி இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு
01 Jul 2025ஐதராபாத் : தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.&nb
-
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
01 Jul 2025மதுரை : திருப்புவனம் இளைஞர் லாக்அப் மரண வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
01 Jul 2025சென்னை, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4