எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.8 - நடிகர் கமல்ஹாசனின், ``விஸ்வரூபம்'' படம் டி.டி.எச் தொழில்நுட்பத்தில் வெளியிடப்படுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தமிழக முதல்வர் தலையிட்டு திரையுலகை காப்பாற்றவேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:-
நம்முடைய திரைஉலகத்தின் மூத்த சகோதரியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ் நாட்டிலுள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகம் சார்பிலும் வைக்கும் பணிவான வேண்டுகோள்:
பத்மஸ்ரீ கமல்ஹாசனுக்கும், திரையரங்க உரிமையாளர்களின் சார்பாக அபிராமி ராமநாதனின் விடுக்கும் செய்தி:-
நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் தன் ``விஸ்வரூபம்''படத்தை டிடிஎச் மூலம் திரையிடுவது பற்றி பல சந்தேங்கள் இருந்ததால் மதுரையில் இருந்த கமல்ஹாசன் அவர்களுடன் டெலி கான்பரன்சிங் மூலம் பல சந்தேகங்கள் கேட்டனர். அதில் அவர் கொடுத்த விளக்கங்கள் கீழ் வருமாறு:-
1. விஸ்வரூபம் படம் டிடிஎச் முறையில் ஒரே ஒரு முறைதான் திரையிடப்படும்.
2. அப்படி திரையிடும்போது திரையரங்குகள் திரையிடுவதற்கு ஒரு நாள் முன்பு இரவு 9.00 மணிக்கு மேல் திரையிடப்படும்.
3. இதற்கு ஒரு டிடிஎச் கருவி மூலம் பார்ப்பதற்கு ரூ. 1000/- வசூல் செய்யப்படும்.
4. இது அவருடைய படத்திற்கு டிரைலர் போன்று இருக்கும். இதைப் பார்ப்பதற்கு திரளாக மக்கள் வருவார்கள் என்று கூறினார்.
அதன் பிறகு அவர் கூறியதை வைத்து விவாதித்த போது மேலும் பல விதமான சந்தேகங்கள் உண்டாயின. அவற்றுள் சில:
1. ஒரு டிடிஎச் கருவிக்கு ஒரு குடும்பம் தான் பார்ப்பார்கள் என்பது உறுதி கிடையாது.
2. இந்த டிடிஎச் முறையில் ஐபிஎல் கிரிக்கெட்டை ஹோட்டல்கள் மற்றும் கிளப்கள் முதலியவற்றில் காண்பிப்பது போல் இதையும் காண்பித்து விட்டால் ஒவ்வொரு டிடிஎச்சையும் பல நூறு பேர்கள் பார்ப்பார்கள். உதாரணமாக ஒரு கிளப்பில் இப்படத்தை திரையிட்டால் பெரிய கிளப்களில் 3000, 4000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வந்து இதை பார்ப்பார்கள். டிவி க்களும் தற்போது 52 இஞ்ச்களில் கிடைக்கிறது. அத்துடன் இந்த டிடிஎச் கம்பெனிகாரர்கள் ஒரு டிடிஎச் கருவிக்கு மூன்று டிவி பார்ப்பது போல் உபகரணங்கள் கொடுக்கிறார்கள். இப்படியெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் நாடு முழுவதும் பல கோடி பேர்கள் படம் பார்த்து விடுவார்களே?
3. இப்படி நடந்தால் திரையரங்கங்கள் பக்கம் யார் வருவார்கள் என்ற பயம் அனைவருக்கும் வந்து விட்டது. திரையுலகின் முன்னோடியாகச் செயல்படும் கமலஹாசன் இத்திரைத்துறையை நேசிப்பவர். ஆனால் இவர் ஒரு காட்சி மட்டும் தான் என்று உறுதி அளிக்கிறார். ஆனால் இவருக்குப் பின் வரும் மற்ற பெரிய படங்கள் அனைத்திற்கும் நிறைய காட்சிகளை கொடுத்து விட்டால் என்ன செய்வது?
4. இப்படி டிடிஎச் கம்பெனிகார்கள் சிறுமுதலீட்டுப் படங்களை வாங்கப் போவதில்லை.
5. திரையரங்கங்கள் இந்த பாதிப்பினால் ஒவ்வொன்றாக மூடி விட்டால் பிறகு சிறு முதலீட்டுப் படங்களே இல்லாமல் போய் விடுமே?
6. இப்படி பல பயங்கள் எங்கள் எல்லோர் மனதிலும் ஏற்பட்டதால் எங்கள் எல்லோருடைய மனதிலும் ஏற்பட்ட ஒரு மித்த முடிவு என்ன வெனில் கமல்ஹாசனை எங்கள் நிர்வாகத்தினர் சந்தித்து இந்த முயற்சியை கைவிடுமாறு கேட்டுக் கொள்ள இருக்கிறோம். இம்முறை உலகத்திலேயே எங்குமில்லை என்பது உண்மை. கமல்ஹாசன் எங்கள் வேண்டுகோளை ஏற்று இந்த முறையை கைவிட்டு விடுவார் என்று நம்புகிறோம்.
7. திரையரங்கங்களை பொருத்த வரை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் ஒன்று கூடி தான் எந்த ஒரு முடிவும் எடுப்போம்.
திரைத்துறை நன்றாக வாழ வேண்டும் என்று அக்கறையுடன் இருக்கும் நமது முதலமைச்சர் ஜெயலலிதா இதில் தலையிட்டு ஒரு சுமுகமான தீர்வைக் காண வேண்டும், எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


