முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மாநில சட்டசபை தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்த காங். - தொண்டர்கள் அதிர்ச்சி !

வியாழக்கிழமை, 10 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

சுதந்திர இந்தியாவில் தனிப் பெரும் கட்சியாக விளங்கிய காங்கிரஸ் கட்சி, தற்போது மிகவும் வலுவிழந்து காணப்படுவது அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்தியாவில் வருகிற 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அதன் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்.  நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 31 சட்டப்பேரவைகளில், காங்கிரஸ் கட்சி 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.

சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் மட்டுமே அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் முதல்வர்களாக உள்ளனர். அதிலும் நடந்து முடிந்த தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 7.53 சதவிகிதமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதம், 2017-ல் 6.3 சதவிகிமாக குறைந்தது. 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து